கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி


(தில்லை)
கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி இன்று  வியாழக்கிழமை 06.03.2014 மாலை 2.00 மணிக்கு கிறிஸ் சோஸ்ரம் கிறீன் காரமேல் பற்றிமா கல்லூரி மைதானத்தில் கல்லூரி முதல்வர் எம்.ஸ் ரீபன் மத்தியு தலமையில் நடைபெற்றது.


இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் மொகான் விஜய விக்கிரம, கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், காணி அபிவிருத்தி, போக்குவரத்து அமச்சின் செயலாளர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார, கிழக்கு மாகாணக்கல்வி பணிப்பாளர் எம்.ரீ.ஏ.எம்.நிசாம், விசேட அதிதிகளாக கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் ஆகியோரும், மற்றும் வைத்தியர்கள், அயல் பாடசாலை அதிபர்கள், கல்லூரியின் பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள், பெற்றோர்கள் என பலரும் கழந்து கொண்டனர்.
இந்நிகழ்வின்போது பிரதம அதிதிகள் வேன்ட் வாத்தியத்துடன் அழைத்து வரப்பட்டு தேசியகீதம், பாடசாலைகீதம் பாடலுடன்; அனைத்து நிகழ்வுகளும் இடம்பெற்றன.
மத்தியு இல்லம், மேபிள் இல்லம், டொரத்தியா இல்லம், இமானுவல் இல்லம் என நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றது புள்ளிகளின் அடிப்படையில்; முதலாமிடத்தினை மேபிள் இல்லமும், இரண்டாமிடத்தினை இமானுவல்  இல்லமும், மூன்றாமிடத்தினை மத்தியு இல்லமும், நான்காமிடத்தினை டொரத்தியா இல்லமும் பெற்றுக்கொண்டதுடன் இவ்வாண்டிற்கான சம்பியனாக மேபிள் இல்லம் தெரிவுசெய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.