மட்/திருக்கொன்றைமுன்மாரி அ.த.க.பாடசாலை மாணவர்களுக்கு கற்பித்தல் உபகரணம் வழங்கல்


(சித்தா)
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட போரதீவுப் பற்றுக் கோட்டப் பாடசாலைகளுள் மிகவும் பின்தங்கிய  பாடசாலையாக மட்/திருக்கொன்றைமுன்மாரி அ.த.க.பாடசாலை காணப்படுகின்றது. இங்கு சுமார் 51 ஆரம்பப் பிரிவு மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இவ்வாறான நிலையில் பின்தங்கிய பிரதேசத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் கல்வி நிலையினை உயர் நிலைக்கு கொண்டு வரும் நோக்கில் மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலய பழைய மாணவர்கள் ( அவுஸ்ரேலிய கிளை) மட்ஃதிருக்கொன்றைமுன்மாரி அ.த.க.பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்க ஒரு தொகுதி கற்றல் உபகரணங்களை இன்று (28.03.2014 ) அன்பளிப்புச் செய்திருந்தது. அதிபர் திரு த.கணேசமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பட்டிருப்பு கல்வி வலய நிருவாகத்திற்குப் பொறுப்பான பிரதிக்  கல்விப் பணிப்பாளர் திரு.மா.உலககேஸ்பரம் அவர்களும் போரதீவுப் பற்றுக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.பூ.பாலச்சந்திரன் அவர்களும், பட்டிருப்பு கல்வி வலய ஆரம்பப்பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.பா.வரதராஜன் அவர்களும்  அவுஸ்ரேலிய கிளை, மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலய பழைய மாணவர்களின் இணைப்பாளர் திரு.எஸ்.அழகுராசா  அவர்களும்  கலந்து சிறப்பித்தனர். அத்துடன் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்