கடந்த சில நாட்களாக இலங்கையின் பல பாகங்களிலும் ஆலயங்களில் பல கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுவருகின்ற நிலையில் அண்மையில் கல்லடி
புனித இஞ்ஞாசியார் ஆலயத்திலும் திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இவ்வாலயத்தின் அருட்தந்தையானவர் இல்லாத நேரம்பார்த்து கடந்த
வியாழக்கிழமை நண்பகல் 1.00 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஆலயத்தின் அன்றாட திருப்பலி நிகழ்வுகளிற்காக பயன்படுத்தும் சுமார்
ஒரு லட்சம் பெறுமதி வாய்ந்த ஒலிபெருக்கி சாதன தொகுதியே கொள்ளையிடப்பட்டுள்ளது. இச்
சம்பவம் தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.












