பெரியகல்லாறு கடலில் தீர்த்தமாடியவர் கடல் சுழியில் சிக்கி மரணம்.

( ரவிப்ரியா )  
பெரியகல்லாறு ஸ்ரீ சர்வார்த்த சித்திவிநாயகர் ஆலய வருடாந்த தீர்த்தோற்சபம் 17.03.2014 திங்கட்கிழமை சமுத்திரத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் தீர்த்தமாடிய பக்தர்
ஒருவர் கடல்  அலை வாங்கலில் அகப்பட்டு, உயிரிழந்த பரிதாப சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. இதுபற்றி மேலும் தெரியவருவதாவது,

தீர்த்தோற்சபத்தை முன்னிட்டு நூற்றுக்கணக்கான ஆண், பெண் பக்தர்கள் கடலில் இறங்கி தீர்த்தமாடிக் கொண்டிருந்தனர். அதேபோல் 56 வயதான கணபதிப்பிள்;ளை தேவராசாவும நீராடிக் கொண்டிருந்த வேளையில் சுழியில் சிக்கி தத்தளித்தபோது அவரை அருகில் நீராடிக் கொண்டிருந்தவர்கள் கரைசேர்த்தபோது, வாயில் இருந்து வெண்ணிற நுரைதள்ளிக் கொண்டிருந்தது. வைத்தியவாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிர் பிரிந்து விட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

கோட்டைக்கல்லாற்றை பிறப்பிடமாகக் கொண்ட இவர் பெரியகல்லாறு -2  அன்னை வேளாங்கண்ணி வீதியில் வசித்துவந்த குடும்பஸ்தவராவார்.ஆலயத்தின் 12 நாட்களும் தவறாமல் கலந்து கொண்ட பக்தரான   இவர்  தீர்த்தோற்சப வேளையில் அகால மரணமடைந்ததைத் தொடர்ந்து பெரியகல்லாறு கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது.