The Bookmark' ஆங்கில சஞ்சிகை வெளியீடு

வாழைச்சேனை நிருபர்.
ஆங்கில கல்வியை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற அரசாங்கத்தின் கல்வித் திட்டத்திற்கமைய ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பிரிவில் உள்ள செம்மண்ணோடை அல் ஹம்றா வித்தியாலயத்தில் 'The Bookmark' என்ற ஆங்கில சஞ்சிகை வெளியீட்டு வைக்கப்பட்டது.
வித்தியாலய ஆங்கில ஆசிரியை திருமதி ஆபிதா புஹாரியின் வழிகாட்டலில் மாணவர்களின் பல்வேறு துறைசார்ந்த ஆங்கங்களை தாங்கி இச் சஞ்சிகை வெளிவந்துள்ளது.
அதிபர் எம்.எஸ்.சுபைதீன் தலைமையில் வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டதுடன் அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி வலய கல்வி பணிப்பாளர் ஏ.எம்.அஹமட் லெப்பை, ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.சுபைர் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டதுடன் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.