நாட்டின் நிலையான அபிவிருத்தியில் பாரிய பங்காற்றிகொண்டிருக்கும் ஊடக
துறையில் பாரியளவில் மாற்றத்தினை ஏற்படுத்தி மக்களே செய்தி வழங்கும் திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதேச மட்ட செயலமர்வானது சக்தி TV நியுஸ் பெஸ்ட் (Ureport) குழுவினரால் மட்டக்களப்பு மகாஜனா கல்லூரி பிரதான மண்டபத்தில் நாளை
16.03.2014 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் 12.00 மணிவரை மிகவும்
பிரமாண்டமான முறையில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பிலிருந்து சக்தியின் நியுஸ் பெஸ்ட் Ureporter ஆக இணைந்து செயற்பட்டுக்கொண்டிருப்போரும்,
புதிதாக இணைந்துகொள்ள ஆர்வமுள்ளோரும் இவ்வூடக செயலமர்வில் கலந்துகொண்டு
பயன்பெறலாமென அழைப்புவிடுக்கின்றனர்
மேலதிக தொடர்புகளுக்கு – 011 4896 896