அத்துடன் மீள்குடியேற்ற பகுதிகளில் 200 குடும்பங்களுக்கு குடிநீரைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தல் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பிரதேச மக்களின் குடிநீர் மற்றும் சுகாதாரம் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் வவுணதீவு பிரதேச செயலகத்தில் திங்கட்கிழமை(28) மாலை நடைபெற்றது.
மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன், வவுணதீவு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச்செயலாளர் பொன்.ரவீந்திரன் , உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள் உட்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
இதன்போதே பிரதியமைச்சர் மேற்கண்டாவறு தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பிரதேச மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்வதற்கான விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன' எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதி மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது பயனாளிகளுக்கு விவசாய உபகரணங்களும், மீள்குடியேற்ற பிரதியமைச்சின் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டது.












