பெரியகல்லாறு அருள்மிகு கடல்நாச்சியம்மன் ஆலய வருடாந்த உற்சபம் 19.05.2014

( ரவிப்ரியா )
கிழக்கில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான அருள்மிகு கடல்நாச்சியம்மனின் ஒருநாள் வருடாந்த உற்சபம் மேயிலா அல்லது ஜுனிலா
என்றொரு சந்தேகம் பக்தர்கள் மத்தியில் நிலவி வருகின்றது. இது குறித்து ஸ்ரீ சர்வார்த்த சித்திவிநாயகர் ஆலய வண்ணக்கர் க.சீவரெத்தினத்திடம் வினவியபோது, அவர் மேயில்தான் நடைபெறும் என்பதை உறுதி செய்தார்.

அத்துடன் வற்றி நியூஸ் அபிமானியான அவர், புலம்பெயர்ந்து வாழும் உறவுகளில் அனேகமானோர் இச் சடங்கில் வந்து கலந்து கொள்வது வழக்கமெனவும் எனவே அவர்களுக்கு முற்கூட்டியே இந்தச் செய்தி எட்டுவதற்கு உதவ வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார். ஏனெனில் புலம் பெயர் உறவுகள் தினமும் தவறாது வற்றி நியூஸ் பார்த்தே எமது பகுதிச் செய்திகளை அறிந்து கொள்வதாகவும், அந்த அளவிற்கு உங்கள் செய்திச் சேவை செல்வாக்குப் பெற்றுள்ளது என பாராட்டவும் அவர் தவறவில்லை. அத்துடன் கிராமத்து நிகழ்வுகளுக்கு முன்னுரிமை அளித்து செயற்படுவதற்காக நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொண்டார்.

எனவே புலம்பெயர் உறவுகளுக்காகவும், உள்ளுர் அன்பர்களுக்காகவும், வெற்றி நியூஸ் வழக்கம்போல முந்திக் கொண்டு பெரியகல்லாறு அருள்மிகு ஸ்ரீ கடல்நாச்சியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு 19.05.2014 திங்களன்று  நடைபெறம் என்பதை உறுதிப்படுத்தி வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றது. அனைவருக்கும் அம்மன் அருளும், ஆசீர்வாதமும் அமைவதாக.