(ச.சுரேந்திக்கா ,சிவம் & தில்லை)
கிழக்குமாகாண தமிழ் மொழித்தின பரிசளிப்புவிழா மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.
மாகாணக்கல்விப் பணிப்பாளர்எம்.ரி.எ. நிஸாம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்
மட்டக்களப்பு வின்சன்ட் உயர்தர பெண்கள் பாடசாலை மாணவர்களின் தமிழித் தாய் வாழ்த்து, வரவேற்புநடனம், பரிசளிப்பு, பேச்சு, குழுஇசை, நாட்டார்பாடல், முஸ்லிம் கலாசார நிகழ்ச்சி மற்றும் வலையங்களுக்கான வெற்றிக்கிண்ணம் வழங்கல் என்பன இடம் பெற்றன.
இவ் விழாவில் கடந்த வருடம் மாகாண மட்ட ரீதியில் தமிழ்மொழித் தின போட்டிகளில் வெற்றிபெற்ற பாடசாலை மாணவர்களுக்கு பதக்கங்களும்,வெற்றிக் கிண்ணங்களும் வழங்கிவைக்கப்பட்டது.
கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதிகிட்ணன் கோவிந்தராசா, தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எம் .எம். இஸ்மாயில், கிழக்கு மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் எஸ்.மனோகரன், ஓய்வுநிலைப் பேராசிரியர் கனடா கலாநிதி ஏ. சண்முகதாஸ், வடமாகாண மேலதிகமாகாணக் கல்விப் பணிப்பாளர்எம். ராதாகிருஸ்ணன் உட்படபலர் பங்கேற்றனர்.
















