20 வருடங்களின பின் வழங்கப்பட்ட நெசவுப் போதனாசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு

(வரதன்)

கிழக்கு மாகாணத்தில் 3மாவட்டங்களையும் சேர்ந்த 28 நெசவுப் போதனாசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு 12.04.2014 அன்று நூலகக் கேட்போர் கூடத்தில் கிராமியக் கைத்தொழில்ப் பணிப்பாளர் ரி. தென்னக்கோன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்குப் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் நஸீர் அகமட் கலந்துகொண்டு 20 வருடங்களின ;பின் நெசவுப் போதனாசிரியர்களுக்கான  நியமனக் கடிதங்களை வழங்கிவைத்தார்

இந்நிகழ்விற்குப் அமைச்சின் செயலாளர் கே-பத்மநாதன் விவசாய திணைக்கள உதவி ஆணையாளர் என்-நௌபர்  ,  மாகாண விவசாயப் பணிப்பாளர் எச்-குசைன் ஆகியோர் கலந்துகொண்டனர்