40 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட மண்முனை மேற்கு பிரதேச சபையின் புதிய கட்டடம் திறப்பு

மண்முனை மேற்கு பிரதேச சபையின் புதிய கட்டடம் இன்று 1ம் திகதி பி.ப 1.30 மணியளவில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீத் மற்றும் ஜனாதிபதியின்ஆலோசகரும் மாகாணசபை உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் ஆகியோரால் திறந்துவைக்கப்பட்டது.

இதுவரைகாலமும் வாசிகசாலை கட்டடத் தொகுதியில் இயங்கிவந்த பிரதேச சபை இன்றுமுதல் இப் புதியகட்டடத்தில் இயங்கவுள்ளது.

இத் திறப்புவிழா நிகழ்வில் பிரதம அதிதிகளாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் மற்றும் ஜனாதிபதியின்ஆலோசகரும் மாகாணசபை உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் இதன்போது கிழக்குமாகாண உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர், உள்ளுராடசி அணையாளர் உட்பட அரச அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.