(சித்தாண்டி நித்தி) கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.ஆர். ராகுலநாயகி தலைமையில் குடி நீர் மற்றும் சுகாதார வளங்கள் செயற்திட்டம் 2014ற்கு இணங்க மீள்குடியேற்ற அமைச்சினால் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகபிரிவில் உள்ள கதிரவெளி, அம்மந்தனாவெளி கிராமசேவகர் பிரிவில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த குடும்பங்களில் தெரிவுசெய்யப்பட்ட 43 பயனாளிகளுக்கான மலசலகூடம் அமைப்பதற்கான தலா ரூபா 60000 நிதியுதவி சான்றிதழ் வழங்களும், அதனை அமைப்பதற்கான மண்வெட்டிகள் வழங்களும், தலா ரூபா 300,000 பெறுமதியான இரண்டு கிணறு தோனிதாட்டமடு, புணானை கிழக்கு ஆகிய பகுதிகளில் அமைப்பதற்கான சான்றுதழ் வழங்கள் ஆகிய நிகழ்வுகள் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் கௌரவ வினாயகமூர்த்தி முரளிதரன் அவர்களால் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதி அமைச்சின் இணைப்புச் செயலாளர் பொன் ரவிந்திரன், வி. நவிதரன் உதவி திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலகம் வாகரை. மீள்குடியேற்ற அமைச்சின் அதிகாரசபையின் பணிப்பாளர் க.சத்தியவரதன். கா.சுதாகரன் அபிவிருத்தி உத்தியோகத்தர் மாவட்ட செயலகம். அவர்களும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராமசேவகர்கள் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதி அமைச்சர் தனிநபர் அபிவிருத்தி பற்றி தெளிவாக விளக்கினார் குறிப்பாக அரசு வழங்கும் உதவிகளோடு மக்களும் தம் உழைப்பால் முன்னேற வேண்டும் என்றும் சரியான தீர்மானங்களை எதிர்காலத்தில் எடுக்கவேண்டும் அப்போது இப்பிரதேசத்திற்கு எதிர்காலத்தில் அபிவிருத்தி பணிகளை தடையின்றி மேற்கொள்ள முடியும் என்றும் தமது அமைச்சின் மூலம் எதிர்காலத்தில் பல்வேறு உதவிகளை வழங்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.விஜயகாந்தின் நன்றியுரையுடன் நிறைவடைந்தன.












