இவ்வாண்டு 5ந்தர புலமைப்பரிசில் பரீட்சையில்; மட்டக்களப்பு மாவட்டத்தில், 172 புள்ளிகளுக்கு மேல் பெற்ற 35 மாணவர்களுக்கு பொன் அரும்பு திட்ட வெகுமதியும் சான்றிதழும் வழங்கும் நிகழ்வு
மட்டக்களப்பு வில்லியம் ஓல்ற் மண்டபத்தில் வெள்ளியன்று பிராந்திய முகாமையாளர் சிந்தியா மாட்டீன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சசிந்திரன், பிரதம அதிதியாகவும், புனித மிக்கேல் கல்லூரி அதிபர், திருமதி சி.எஸ்.மாசிலாமணி, வின்சன்ர் உயர்தரப் பாடசாலை அதிபர் இராஜகுமாரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும், பெற்றோர் சார்பாக அம்பாரை மேலதிய அரசாங்க அதிபர் க.விமலநாதனும்,இலங்கை வங்கி கிளை சிரேஸ்ட முகாமையாளர் எம்.ஜே.நவ்பல் உட்பட மாட்டத்தின் கிளை முகாமையாளர்களும் மாணவர்களின் பெற்றோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நடன நிகழ்வுகளும் இடம் பெற்றன. 35 மாணவர்களுக்கும் தலா பத்தாயிரம் ரூபா வீதம் அவர்களின் றண்கெக்குழு சேமிப்புக் கணக்கில் வைப்பிலிடப்பட்டதுடன் வைபவ ரீதியாகச் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்படட்டன.












