நடனக் கலைஞர் மோகனபிரியன் தவராஜா அவர்களது ஆடும் அருள்ஜோதி எனும் பரத நாட்டிய நிகழ்வு மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில்
இடம்பெற்றது.
இவ் நிகழ்விற்குப் பிரதம அதிதியாக கி.பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் எஸ்- மௌனகுரு சிறப்பு அதிதிகளாக மட்டு வலயக் கல்விப் பணிப்பாளர் கே.- பாஸ்கரன் மாநகர சபை ஆணையாளர் எம் -உதயகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்
பரத கலாலையா ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இவ் நிகழ்வில் ஆடற் கலைக் கலைஞர் கிழக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் நாட்டிய நிகழ்வுகளை உலகளாவிய ரீதியில் வழங்கி வருகின்றார். இவர்
வளரும் சாதனையாளர் நாட்டியக் கலையரசன் எனப்பல விருதுகளைப்
பெற்றுள்ளார். இவரது நடன சுற்றுலாவின் ஒரு பகுதியாக இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற நாட்டிய நிகழ்வில் நடனத்துறை ஆர்வலர்கள்
பெருமளவில் கலந்துகொண்டனர்.இவர் புனித மிக்கேல் கல்லுரியின் பழைய
மாணவரென்பது குறிப்பிடத்தக்கது.












