மதுவரித் திணைக்களத்தின் மட்டக்களப்பு மதுவரி அத்தியட்சகரின் புதிய அலுவலகம் கல்லடி பிரதான வீதியில்இன்று புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
முதல் நிகழ்வாக மட்டக்களப்பு , கல்முனை மற்றும் அம்பாரை மதுவரிநிலையங்களின் பரிசோதகர்களின் அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றது.
கிழக்கு மாகாண மதுவரித் திணைக்கள உதவி ஆணையாளர் கே.எம்.ஜி. பண்டார புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார்.
மாவட்ட மதுவரி ஆணையாளர் வசந்த திசாநாயக்கா, மட்டக்களப்பு நிலையப் பொறுப்பதிகாரி பிரதம பரிசோதகர் எஸ். தங்கராஜா, மட்டக்களப்பு மதுவரி அத்தியட்சகர் என். சோதிநாதன், கல்முனை பொறுப்பதிகாரி பிரதம பரிசோதகர் ரி. டயலீஸ்பரகுமார், அம்பாரை பொறுப்பதிகாரி பிரதம பரிசோதகர் பிரியந்த லியனகே ஆகியோர் பங்கேற்றனர்.
இதுவரை காலமும் இவ்அலுவலகம் மட்டக்களப்பு பயனியர் வீதியிலுள்ள கூட்டுறவு சங்க மண்டபத்தில் இயங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது.












