(சித்தாண்டி நித்தி) கலியுகாதி சுத்த தினம்(18.6) (296) நாடி 0 விநாடி 12 தற்பரை 10 சரியான ஜயசிறி சித்திரை மீ 2 (14.04.2014) திங்கட்கிழமை முற்பகல் நாடி 08 விநாடி 12 (மணி 6-11) பூர்வபக்ஷ சதுர்த்தி திதியில் அத்த நட்சத்தித்தின் 2ம் பாதத்தில் விபாகாத நாம யோகத்தில் வணிகக் கரணத்தில் மேட லக்கினத்தில் மேட நவாம்மிர்தத்தில் சந்திரன் கால வோறையில் சாவிககுண வேளையில் காகம் நடைத் தொழிலும் சூக்கும் பட்சி நடைத்தொழிலும் செய்யும் காலத்தில் இப்புதிய ஜய வருஷம் பிறக்கின்றது.
ஜய வருஷப் பிறப்பு திங்கட்கிழமை ( காலை 6.11 மணிக்கு)
ஸ்னான முறை
இப்புண்ணிய காலத்தில் யாவரும் விதிப்படி சங்கப்பித்து மருத்துநீர் தேய்த்து (சிரசில் ஆல இலையுடன், காலில் விளா இலையும் வைத்து) ஸ்னானம் செய்யவேண்டும்.
ஆடைகள்
வெண்மை, சிவப்பு பட்டாடையும் வெண்டை சிவப்பு கரை தரித்த ஆடையும் பவளம், முத்து இழைத்த தங்க ஆபரணம் அணியவேண்டும்.
வழிபாடு
விக்னேஸ்வரர் சிவசக்தி முதலிய குலதெய்வ வழிபாடு செய்து குரு, பெற்றோர், பெரியோர் ஆகியோரை வணங்கி ஆசி பெறவேண்டும்.
உணவு
உற்றார், உறவினர்களுடன் அளவளாவி அறுசுவை அமைந்த உணவுகளுடள் தயிர், சோறு, உப்பு என்பவை சேர்த்து அருந்தவேண்டும்.
விஸ்வ புண்ணியகாலம்
13.04.2014 இரவு 2.11மணி முதல் 14.04.2014 முற்பகல் 10.11 வரை
தோஷ நட்சத்திரங்கள்
ரோகிணி, உத்தரம் :2ம், 3ம், 4ம் கால்கள்
அத்தம், சித்தரை, :1ம், 2ம் கால்கள்
திருவோணம், அவிட்டம் :3ம், 4ம் கால்கள்
சதயம், பூரட்டாதி :1ம், 2ம், 3ம் கால்கள்
இவற்றில் பிறந்தோர் தவறாது தானதர்மம் செய்து இறைவன் இறைவியர்ளுக்கு அர்ச்சனை செய்து வழிபாடுகளை செய்யவும்.
மழை மரைக்கால் 03
நன்மழை பயிர்விருத்தி தானிய விளைவு அகமலிவு கணங்களுக்கு சுகம்.













