(படுவான் பாலகன்) மலர்ந்திருக்கின்ற ஜய வருட தமிழ், சிங்கள புதுவருட கொடுக்கல் வாங்கல் ஆரம்ப நிகழ்வு கொக்கட்டிச்சோலை மக்கள் வங்கி கிளையில் கிளை முகாமையாளர் திரு.மா.மோகனதாஸ் அவர்களின் தலைமையில் இன்று (15) காலை 09.00மணிக்கு இடம்பெற்றது.இதில் முதலாவது பண வைப்பினை கொக்கட்டிச்சோலை திருத் தாந்தோன்றீஸ்வரர் ஆலய நிருவாகத்தினர் மேற்கொண்டனர்.
இதன் போது கைவிஷேடம், மற்றும் இனிப்பு பண்டங்கள் வழங்கி வாழ்த்துக்களும் பரிமாறப்பட்டதுடன் கூடுதலான பணத்தினை வைப்பில் இட்டவர்களுக்கு பெறுமதியான அன்பளிப்பு பொருட்களும் வழங்கப்பட்டது.


















