மட்டக்களப்பு பைனியர் வீதியில் அமைந்துள்ள இலங்கை காப்புறுதியின் பிராந்திய தலைமை அலுவலகத்தில், பாரம்பரிய முறைப்படி புத்தாண்டு கொடுக்கல் வாங்கல் நிகழ்வு பிராந்திய
முகாமையாளர் முபாறக் தலைமையில் வாடிக்கையாளர்களை மையப்படுத்தி வெகு சிறப்பாக வியாழனன்று நடைபெற்றது. பிரதம அதிதியாக கிழக்கு மாகாண விற்பனை முகாமையாளர் ருவான் றொட்றிக்கோ, மற்றும் பிராந்திய விற்பனை முகாமையாளர் இந்திரன், நிருவாக உத்தியோகத்தர் திருமதி கருணாகரம் உட்பட அமைப்பாளர்கள், ஆலோசகர்கள, காரியாலய உத்தியோகத்தர்கள் வாடிக்கையானர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
வைபவ ரீதியாக நிகழ்வுகள் மங்கல விளக்கேற்றி, ஆரம்பித்து வைக்கப்பட்டது. வாடிக்கையாளர்களுக்கு சிற்றுண்டியும் கைவிஷேசமும் வழங்கிவரவேற்கப்பட்டார்கள். அத்துடன் புதிய வியாபாரங்களும் கையேற்கப்பட்டது.












