தீவு முழுவதற்குமான சமாதான நீதவானாக வி.ஜெகதீசன் நியமனம்

(உ.உதயகாந்த்)

அம்பாறை மாவட்டத்திலுள்ள பாண்டிருப்பு  கிராமத்தைச் சேர்ந்த வேதநாயகம் ஜெகதீசன் அவர்கள் இன்று (22) செவ்வாய்க்கிழமை கல்முனை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மேலதிக மாவட்ட நீதிபதி ஏ.ஜுட்சன் முன்னிலையில் இலங்கைத் தீவு முழுவதற்குமான ஒரு சமாதான நீதவானாகச் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.


பெரியநீலாவணையைச் சேர்ந்த வேதநாயகம் – சுகிர்தமலர் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனான இவர், பெரியநீலாவணை சரஸ்வதி வித்தியாலயம் மற்றும் மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவரும், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞானமாணிப் பட்டதாரியும், இலங்கை நிருவாக சேவையின் (SLAS) கீழ் தற்போது ஆலையடிவேம்பு பிரதேச செயலாளராகப் பணியாற்றி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.