யானைகளின் தாக்குதல்களை குறைப்பதற்கு யானை வேலிகள் அமைக்கப்பட்டாலும் அவை பலனளிக்கவில்லை!

மட்டக்களப்பு  மாவட்டத்தில்  யானைகளின்  தாக்குதல்களை   குறைப்பதற்கு   யானை  வேலிகள்  அமைக்கப்பட்டாலும்  அவை  பலனளிக்கவில்லை  என   கிழக்கு  மாகாணசபை  உறுப்பினர் இரா.துரைரெட்னம்   தெரிவிக்கின்றார்.

இதை  ஆதாரத்துடன் அப்பிரதேசத்திற்கு சென்று அவர்  நிருபித்தார்.
பட்டிப்பளை  பிரதேச  செயலாளர்  பிரிவின்  கச்சக்கொடிசுவாமிமலை கிராமத்தின்  யானை  வேலி கேற்  அருகில்  வைத்து  ஆதாரபூர்வமாக நிருபித்தார். கச்சக்கொடிசுவாமிமலை   பிரதேசம்  யானைகளின் தாக்குதல்களுக்கு   அதிகம்  உள்ளாகும் பிரதேசம்  என  பட்டிப்பளை பிரதேசசெயலாளர்  சிவப்பிரியா  வில்வரெட்னம்  தெரிவித்தார்.

மட்டக்களப்பு  மாவட்ட  வனஜூவராசிகள் திணைக்கள  அதிகாரிகளிடம்   தான்  பல தடவை கூறியும்  எவ்வித  ஆக்கபூர்வமான  நடவடிக்கையும்   எடுக்கப்படவில்லை  என  மாவட்ட அரச  அதிபர்   தெரிவித்தார்.
கச்சக்கொடிசுவாமிமலை   பிரதேசத்தில்  10  ற்கு  மேற்பட்ட  வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர்  ஒரு காலையும்  இழந்துள்ளார்.

இதுதவிர மண்முனை மேற்கு பிரதேசத்தில் பன்சேனை,காந்திநகர் உன்னிச்சை போன்ற கிராமங்களும் அடிக்கடி காட்டுயானையின் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றது.  இப் பிரதேசங்களில் மக்களுக்கு பயன்தரு மரங்களும்  காட்டு யானைகளினால் அழிக்கப்பட்டுள்ளன.