தொழிற் பயிற்சிபெறும் மாணவர்களின் பெற்றோருடனான கலந்துரையாடல்


(ராஜா)
மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள விவேகானந்த தொழில்நுட்பக் கல்லூரியில் கல்லூரியில் பயிற்சிபெறும் மாணவர்களின் பெற்றோருடனான கலந்துரையாடல் ஒன்று இன்று (26) சனிக்கிழமை நடைபெற்றது.

இதன்போது கல்லூரியின் பணிப்பாளர் க.பிரதீஸ்வரன் அவர்கள் இந் நிகழ்வின் நோக்கம் பற்றி கூறுகையில் மாணவர்கள் எவ்வாறான பயிற்சியினை பெற்றுக்கொண்டிருக்கின்றனர்> பயிற்சியின் பின்னர் அவர்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய பயன் பற்றி  அனைத்து பெற்றோரும் அவசியம் அறியவேண்டும் என்பதற்காகவே இந் நிகழ்வை ஏற்பாடு செய்தாக கூடியதோடு, கல்லூரியின் செயற்பாடு> சேவைகள் பற்றிய விளக்கங்களையும் பெற்றோருக்கு தெளிவாக எடுத்துக்கூறினார்.

இந் நிகழ்வில் கல்லூரியின் பயிற்சிநெறி பற்றிய விளக்கத்தினை போதனாசிரியர் இ.குலதீஸ் அவர்கள் வழங்கியதோடு தொழில்பயிற்சியின் முக்கியத்துவம் பற்றியும் தேசிய தொழில் தகைமைகள் சான்றிதழ் (NVQ) பற்றிய விளக்கத்தினையும் வழங்கினார். அத்தோடு பகுதிநேர போதனாசிரியரும், தொழில்வழிகாட்டி உத்தியோகத்தருமான அ.சதானந்தன் அவர்கள் தற்போது எமது பிரதேசத்தின் தொழில்நிலைமை பற்றியும், பல்கலைக்கழக அனுமதி கிடைக்காவிட்டாலும் தம்மை எவ்வாறு வழப்படுத்தலாம் என்றும், வெளிநாடு செல்பவர்களாக இருந்தாலும் ஏதாவது துறையில் தேசிய அங்கீகாரம் பெற்ற சான்றிதழை  பெற்றிருந்தால் அதிக வருமானத்தை ஈட்டலாம் எனவும் குறிப்பிட்டார்.

இறுதியில இதில் கலந்து கொண்ட பெற்றோரின் கருத்துக்கள் அறியப்பட்டபோது தங்கள் பிள்ளைகள் கல்லூரி பற்றி நல்லமுறையில் கூறியிருந்தாலும் இந்த கலந்துரையாடலின் பின்னர் தாங்கள் மிகத் தெளிவான விளக்கத்தினைப் பெற்றதாகவும்> இது ஓர் சிறந்த அனுபவம் என்றும். இக்கல்லூரி மென்மேலும் வளர்ந்து எம் பிரதேசத்தில் இன்னும் பல வகையான தொழில்பயிற்சிகளை வழங்கவேண்டும் என்றும்> அதற்கு பெற்றோர் சார்பில் தாங்கள் என்றும் துணைநிற்போம் எனவும்> கூறினர். அத்தோடு இக்கல்லாரி மாணவர்கள் அண்மையில் மெற்கொண்ட கவ்விச் சுற்றுலாப் பயணம் பற்றிய பெற்றோரின் கருத்துக்கள் கேட்கப்பட்டபோது தங்கள் பிள்ளைகள் மீது சிறப்பான பாதுகாப்பை நிர்வாகம் வழங்கியதோடு நல்லமுறையில் வழிநடத்தப்பட்டதாகவும் கூறினர்.

இறுதியாக க.விக்னேஸ்வரன் அவர்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் வருகைதந்த பெற்றோருக்கு நன்றியினைத் தெரிவித்ததோடு> என்றும் கல்லூரியின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்.

எமது பிரதேச மக்களுக்கும்> பெற்றோருக்கும் இவ்வாறான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி சிறந்த வழிகாட்டலை மேற்கொள்வது தற்போதைய காலத்தின் தேவையாகும்.