கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இலங்கையில் - கண்ணகி வழிபாட்டு புகைப்பட கண்காட்சி நிகழ்வு

(சித்தாண்டி நித்தி&சிவம்) இலங்கையில் - கண்ணகி வழிபாடு தொடர்பான புகைப்பட கண்காட்சி இந்துநாகரிக கற்கைகள்துறை இணைப்பாளர் சாந்தி கேசவன் தலைமையில் கிழக்கு பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாக கலைகலாசார பீட கட்டடத்தில் இன்று (28.04.2014) நடைபெற்றது.

இந்துநாகரிக கற்கைகள் புலம், கலைகலாசார பீடம் இணைந்து இணைந்து  நடாத்திய புகைப்பட கண்காட்சி ஆரம்ப நிகழ்வுக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா அத்துடன்  கலைகலாசார பீடாதிபதி கலாநிதி கே.ராஜேந்திரம், சித்திரலேகா மௌனகுரு மற்றும் பல்கலைக்கழக பீடாதிபதிகள் ,விரிவுரையாளர்கள், மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இந்து மதத்தவர் மற்றும் சிங்கள மதத்தவர்களின் வழிபாடுகளில் கண்ணகி வழிபாட்டு முறைகளின் ஒருமைப்பாட்டையும் அதன் முக்கியத்துவத்தை உணர்த்தி நிற்கும் கண்ணகி வழிபாட்டு முறைகளை, பலதரப்பட்ட ஆலயங்களில் நடைபெற்ற உண்மைக்காட்சிகளை புகைப்படமாக்கி அவற்றை நவீன தொழிநுட்பத்தில் வடிவமைத்து அனைவரும் கண்ணகி வழிபாட்டில் நடைபெறும் சம்பாசனைகளை தெளிவாக அறிந்துகொள்ளும் விதத்தில் கலாநிதி சார்னி ஜெயவர்தன மற்றும் மலாதி டி அல்விஸின் அவர்களினால் வடிவமைக்கப்பட்டு கண்காட்சிக்கென வைக்கப்பட்டுள்ளது.
  
இக்கண்காட்சி தொடர்ந்து 29ம், 30ம் திகதி வரை நடைபெறவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.