கிழக்கிலங்கையில் பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார அரசியல் அபிவிருத்திகளை உறுத்திப்படுத்தல் மற்றும் பெண்களின் தலைமைத்துவம், பால்நிலை சமத்துவமின்மை, சீதனக் கொடுமை, தேசிய ரீதியில் பெண்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்தல், பெண்களின் சிறந்த அரசியல் பிரவேசத்திற்கு ஊக்கமளித்தல் அவர்கள் எதிர்நோக்கும் சவால்களை எதிர்கொள்வதற்காக பெண்கள் செயற்குழுவொன்று உதயமாகியுள்ளது.
இதற்கான அங்குரார்ப்பணக் கூட்டத்தை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் மனித அபிவிருத்தி தாபனமும் இணைந்து ஏற்பாடு செய்தது. இது சனிக்கழமையன்று கல்முனை கிரிஸ்ரா இல்லத்தில் மு.ப 9.00 மணியளவில் நடைபெற்றது.
இவ்நிகழ்வின் முதல் செயற்பாடாக மனித அபிவிருத்தி தாபனத்தினால் கடந்த சுனாமிக்கு பின்னரான காலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பெண்கள் அபிவிருத்தி தொடர்பான விளக்கவுரையினை மனித அபிவிருத்தி தாபன இணைப்பாளர் பி.ஸ்ரீகாந்த்; செய்தார்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய காரியாலய புலனாய்வு உத்தியோகஸ்தர் ஏ.சி.ஏ.அஸீஸ்; இக்கலந்துரையாடல் தொடர்பான விளக்கவுரையினை வழங்கினார். மேலும் தற்போதய காலத்தில் பெண்களின் நிலை பற்றியும் அவர்களின் மேம்பாட்டிக்கான தேவைகள் பற்றியும் விளக்கினார்.
இக் கலந்துரையாடல் கூட்டத்தில் கிழக்கிலங்கையில் பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார அரசியல் அபிவிருத்திகளை உறுத்திப்படுத்தல் மற்றும் பெண்களின் தலைமைத்துவம், பால்நிலை சமத்துவமின்மை, சீதனக் கொடுமை, தேசிய ரீதியில் பெண்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்தல், பெண்களின் சிறந்த அரசியல் பிரவேசத்திற்கு ஊக்கமளித்தல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இந் நிகழ்வுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கல்முனை பிராந்திய காரியாலய இணைப்பாளர் இஸ்ஸடீன்லத்திப், தென்கிழக்க பல்கலைக்கழக சிரேஷ;ட விரிவரையாளர் அனூசியா சேனாதிராஐh, சட்டத்தரணி எம்.பி.எம்.பௌசான், பெண்கள் தொடர்பாக செயற்படும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகஸ்தர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.
கலந்துரையாடலின் இறுதியில் பொருளாதார சமூக, பண்பாட்டு மற்றும் அரசியல் அபிவிருத்திற்கான பெண் செயற்குழுவினை ஸ்தாபித்தலுக்கான 13 பேர்கள் அடங்கிய செயற்குழுவும், 6 பேர்கள் கொண்ட ஆலோசகர் குழுவும் உருவாக்காப்பட்டது. இக் குழுக்களின் மூலம் எதிர்கால செயற்பாடுகள் முன்னேடுக்கப்படவுள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது.












