மட்டக்களப்பு மகாஜனாக்கல்லூரியில் உயர்தரப்பிரிவில், விஞ்ஞான தொழில்நுட்பப்பாடங்களை பயில விரும்பும் மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.புதன்கிழமை(30) முதல் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன என பாடசாலை அதிபர் திருமதி என்.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர்,
மட்டக்களப்பு மகாஜனாக் கல்லூரி 1000 பாடசாலைத்திட்டத்தினுள் உள்வாங்கப்பட்டு கணித, விஞ்ஞான பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதோடு, உயர்தரம் கற்பிப்பதற்கு சிறந்த வளவாளர்களைக் கொண்ட விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் இக்கல்லூரியில் சகல வசதிகளையும் கொண்ட மஹிந்தோதைய விஞ:ஞான ஆய்வுகூடம் நிறுவப்பட்டுள்ளதோடு கல்வி அமைச்சிலிருந்து சகல பௌதீக வளங்களும் வழங்கப்பட:டுள்ளன.
இக் கல்லூரியில் விஞ்ஞான , தொழல்நுட்பப் பாடங்கள் ஆரம்பிப்பதற்கு மாகாண கல்வித்திணைக்களத்தால் சிபார்சு செய்யப்பட்டிருப்தோடு இப்பாடங்கள் ஆரம்பிப்பதற்கு சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்றும் பாடசாலை ஆசிரியர் திருமதி என்.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
அண்மையில் வெளியிடப்பட்ட கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் எமது பாடசாலையிலிருந்து தோற்றிய மாணவிகளில் 88வீதமானவர்கள் உயர்தரம் கற்பதற்குத் தகுதி பெற்றுள்ளனர்.
பரீட்சைக்குத் தோற்றிய 78 பேரில் 61 மாணவிகளில் உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளதோடு, 39 மாணவிகள் விஞ்ஞானப் பிரிவுக்குத் தகுதி பெற்றுள்ளனர். மேலும் விஞ்ஞானம், கணிதம், தமிழ் மொழி இலக்கியம் ஆகிய பாடங்களில் 75 வீதமான மாணவிகள் சித்தி பெற்றுள்ளனர்.
அத்தோடு, செல்வி கிரிதரன் வக்சனா, செல்வி விஜயகுமாரன் டிலக்சனா ஆகிய மாணவிகள் 8ஏ, 1 சீ பெறுபேற்றினை பெற்றிருப்பதோடு, செல்வி இளையதம்பி ஜனார்த்தனி 6 ஏ 1 பி, 1 சி 1 எஸ் பெறுபேற்றைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












