சுவாமி விபு­லா­னந்தர் அழ­கியற் கற்­கைகள் நிறு­வ­கத்­திற்கு அமைச்சர் எஸ்.பி.திஸா­நா­யக்க விஜயம்!

உயர் கல்­வி­ய­மைச்சர் எஸ்.பி.திஸா­நா­ய க்க நேற்று 4ம் திகதி வெள்ளிக்கிழமை கிழக்கு பல்க­லைக்­க­ழ­கத்தின் மட்­டக்­க­ளப்பு கல்­ல­டி­ சுவாமி விபு­லா­னந்தர் அழகியற் கற்­கைகள் நிறு­வ­கத்­திற்கு விஜயம் செய்து அங்கு நிர்மா­ணிக்­கப்­பட்டு வரும் மருத்­துவ பீட விடு­திக்­கட்­டிட நிர்­மாண வேலைகளை பார்­வை­ யிட்டார்.

கிழக்கு பல்கலைக்­க­ழக உப வேந்தர் கலா­நிதி கிட்ணன் கோபிந்­த­ராஜா , சுவாமி விபு­லா­னந்தர் அழ­கியற் கற்­கைகள் நிறு­வ­கத்தின் பணிப்­பாளர் கலாநிதி எம்.பிறேம்­குமார் , கிழக்கு பல்க­லைக்­க­ழக சிரேஸ்ட பதி­வாளர் எம்.மகேசன் ஆகியோர் அமைச்சர் எஸ்.பி.திஸா­நா­யக்கவை வரவேற்றனர்.

இதன்போது,  இங்கு நிர்­மாணிக்­கப்­பட்டு வரும் மாணவர் விடு­திக்­கட்­டிட நிர்மாண வேலை­களை பார்­வை­யிட்­ட­துடன் நிர்­மாண வேலை­களின் முன்னேற்றம் பற்றியும் அமைச்சரினால் ஆராயப்பட்டது.