(சித்தாண்டி நித்தி) நிறைவான இல்லம் வளமான தாயகம் 'கிராமம் கிராமமாக வீடு வீடாக' தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் - 2014 மக்களை வலுவூட்டும் நடமாடும் சேவை மட்டக்களப்பு மாவட்டம் எனும் தொணிப்பொருளில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அனுசரணையுடன் ஏறாவூர்பற்று பிரதேச ஒருங்கிணைப்பு தலைவரும் ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் வழிகாட்டலின் கீழ் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் திரு. கே.தனபாலசுந்தரம் தலைமையில் (25.04.2014) பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
நடைபெற்ற நடமாடும்சேவையினூடாக பிறப்பு சான்றிதழ்கள், இறப்பு சான்றிதழ்கள் திருமணப்பதிவு மற்றும் தேசிய அடையாளட்டை போன்ற பதிவுகளுக்காக ஆட்பதிவு திணைக்களத்தின் ஊடாக அதிகமான பதிவுகள் மேற்கொள்ளப்பட்துடன் காலம் கடந்த திருமணப்பதிவுகளும் உடன்பெற்றுக்கொள்ளும் வகையில் தங்களின் சேவையை வழங்கியிருந்தனர். அத்துடன் சமூகசேவை திணைக்களம், காணி அபிவிருத்தி திணைக்களம், சுகாதார திணைக்களம், சிறுகைத்தொழில் அபிவிருத்தி திணைக்களம், கால்நடை திணைக்களம், கமநல திணைக்களம், பெண்கள் சிறுவர் அபிவிருத்தி திணைக்களங்களில் மக்களால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட்டன.












