போரதீவுப்பற்று கல்விக்கோட்டத்தில் வரலாற்று சாதனை


(மகிழூர்-ரஜனி)
மட்/பட்/ காக்காச்சிவட்டை விஸ்னு வித்தியாலயத்தில் கல்வி பயிலும் தியாகலிங்கம் -டிலக் ஷனா அவர்கள் 2013 டிசம்பர் நடைபெற்ற க.பொ.த(சா/த)ப் பரீட்சையில் 8A , 1C பெறுபேற்றைப் பெற்று போரதீவுபற்று கல்வி கோட்டத்தில் வரலாற்று சாதனையினை நிகழ்த்தியுள்ளார் .

இவர் காக்காட்சிவட்டையைச் சேர்ந்த தியாகலிங்கம் தமயந்தி தம்பதிகளின் சிரேஸ்ர புதல்வி  ஆவார் இவர் 2013ல் நடைபெற்ற தரம்11 சமூகவிஞ்ஞான போட்டியிலும்  அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இவரை பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் கல்விச் சமூகம் வாழ்த்துகின்றனர். தற்போது இப் பாடசாலையின் அதிபராக  சே.தம்பிப்பிள்ளை கடமை ஆற்றுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.இவருடைய இச் சாதனையினால் அப்பாடசாலை சமூகமும் அக் கிராமமும் பெரும் மகிழ்வில் உள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.