(ச.சுரேந்திக்கா)
மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி உத்தியோகத்தர் நலன்புரிச் சங்கத்தின் ஒன்றுகூடலுடலான பொதுக் கூட்டம் நிகழ்வு நேற்று26ம் திகதி காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி உத்தியோகத்தர் நலன்புரிச் சங்கத்தின் ஒன்றுகூடலுடலான பொதுக் கூட்டம் நிகழ்வு நேற்று26ம் திகதி காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வு சங்கத்தின் தலைவரும் மாவட்ட சமுர்த்தி பிரதிப்பணிப்பாளருமான பி.குணரெட்ணம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வு மங்கல விளக்கேற்றலைத் தொடர்ந்து, கடந்த யூலை மாதம் மன்னம்பிட்டி வாகன விபத்தில் பலியான உத்தியோகத்தர்கள் உட்பட இதுவரை மரணித்த அனைத்து சமுர்த்தி உத்தியோகத்தர்களினதும் அத்மா சாந்திக்காக இறைவணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து, கடந்த காலங்களில் இச் சங்கத்தின் செயற்பாடுகள் பற்றி சங்கத் தலைவர் பி.குணரெட்ணம் அவர்களால் அனைவருக்கும் நினைவுபடுத்தப்பட்டது. அத்துடன் சங்கம் எதிர்காலத்தில் எவ்வாறு செயற்படவென்டும் போன்ற விடயங்கள் பற்றியும் தெரிவிக்கப்பட்டது.
இதில், கடந்த வருடம் யூலை மாதம் தொடக்கம் நேற்று 26ம் திகதி வரை உத்தியோகத்தர்களின் மரணத்திற்ககான செலவு ,மருத்துவச்செலவுகள் உட்பட நலன்புரி வரவு செலவு அறிக்கை அடங்கியிருந்தது.
இதன்போது கடந்த வருடம் தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த நலன்புரிச் சங்க அங்கத்தவர்களின் பிள்ளையளுக்கு பதக்கங்களும், நினைவுப் பரிசில்களும் வழங்கி அவர்களை பாராட்டினர்.
இறுதியாக உத்தியோகத்தர்களின் பிரச்சனைகள், கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு, தெடர்ந்து புதிய நிருவாகத் தெரிவும் இடம்பெற்றது.












