எமது தனித்துவத்தையும் அடையாளத்தையும் பேணிக்காப்பது தாய் மொழியான தமிழ் மொழியே - உபவேந்தர்

(வரதன்)
 தமிழ்பேசும் மக்களின் மொழி கலாச்சார விழுமியங்களை கட்டிக் காப்பது தமிழ்மொழியே. உலகில் மூவாயிரம் மொழிகள் உள்ள போதிழும் எழுத்து வடிவில் நூற்றிற்கும் குறைவான மொழிகளே உள்ளன.அவற்றில் செவ்விய
மொழிகளில் பழமைவாய்ந்ததும் புதுமொழியாக காணப்படுவதுடன் இன்றும் பேச்சு வழக்கில் உள்ள மொழி தமிழ்மொழியே.

எமது சமுதாயத்தில் இவ்வாறான நிகழ்வுகளில் மாணவர்கள் திறமைகளை மாகாண தேசிய மட்டங்களில் வெளிக்கொணர்வது மிகவும் பாராட்டுக்குரியதும் வரவேற்கத்தக்கதுமாகும்.மொழி மனிதனின் ஒரு பலம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தாய்மொழியை மாணவர்கள் மறந்து விடக்கூடாதென கிழக்கு மாகாண தமிழ்மொழித்தின பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட கிழக்குப் பல்கலைக் கழகஉபவேந்தர் கிட்ணன் கோபிந்தராஜா தெரிவித்தார்.




ஏழு வருடங்களின் பின்   வலய மாவட்டமாகாண தேசிய ரீதியில் தமிழ்மொழிதினப் போட்டிகளில் விஷேட திறமைகளை காட்டிய மாணவர்களுக்கு இவ் நிகழ்வில் பிரதம அதிதிகளால் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு சான்றுதல்களும் வழங்கப்பட்டதுடன் திறமையின் அடிப்படையில் தெரிவான கலை கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்படத்தக்கது.