அமிர்தகழி புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தில் பெரிய வௌ்ளி சிலுவைப்பாதை நிகழ்வு

(ச.சதீஸ்)  
மட்டக்களப்பு- அமிர்தகழி புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தில் பெரிய வௌ்ளி தினத்தினை முன்னிட்டு இன்று 18ம் திகதி காலை சிலுவைப்பாதை நிகழ்வு நடைபெற்றது.

இந் நிகழ்வு பங்குத் தந்தை F.A.யூலியன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது நடைபெற்ற சிலுவைப்பாதை நிகழ்விலும், திருப்பலியிலும் பெருமளவில் மக்கள் கலந்துகொண்டனர்.

இன்றையதினம் பிற்பகல் விசேட ஆராதனைகளும், வழிபாடுகளும் இடம்பெறும். எனவும் பங்குத் தந்தை  F.A.யூலியன் அவர்களால் தெரிவிக்கப்பட்டது.