(சித்தாண்டி நித்தி) கொம்மாதுறை ஒருமுழச்சோலை சித்திவிநாயகர் வித்தியாலய கணனிகூடத்திற்காகன தளபாடங்களை வேல்ட் விஷன் நிறுவனத்தினால் கையளிக்கும் நிகழ்வு இன்று (22.04.2014) பாடசாலையில் நடைபெற்றது.
இப்பாடசாலைக்கு கல்வி அமைச்சினால் கணனிகள் வழங்கப்பட்ட போதிலும் பயன்படுத்த தளபாடங்கள் இல்லாத நிலையில் பல அசௌகரியங்களை எதிர்கொண்ட இப்பாடசாலைக்கு கணனி மேசைகள் மற்றும் கதிரை என்பவற்றை வேல்ட் விஷன் முகாமையாளர் திரு.அ.ரவிந்திரன் அவர்களால் பாடசாலையின் திரு.வே.இராஜேந்திரன் அதிபரிடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் வேல்ட் விஷன் நிறுவனத்தின் கல்வி பிரிவுக்கு பொறுப்பான திட்ட உத்தியோகத்தர் செல்வி.கவிதா மற்றும் மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.












