கிழக்குப் பல்கலைக் கழக நிருவாகத்தின் மீது அதிர்ப்பதியை தெரிவிக்கும் வகையில் மாணவர்கள் வந்தாறுமூலை வளாக முன்றலில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உபவேந்தரை மாற்ற வேண்டும் என்ற நிபந்தனையையும் இரு வார கால இடைவெளியின் பின் கிழக்குப் பல்கலைக் கழக கல்வி நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட போதிலும் இரண்டாம் மூன்றாம் வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கை இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை இவர்களுக்கான கல்வி நடவடிக்கை உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும், பல்கலைக் கழக நிருவாகம் மாணவர்கள் மீது அக்கறை செலுத்த வேண்டும், புதிதாக திறந்துவைக்கப்பட்ட நூலகம் உட்பட கட்டடங்கள் மாணவர்களின் பயன்பாட்டிற்கு விடப்பட வேண்டும் போன்ற கோரிக்கைளையும் முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பல்கலைக் கழக நிருவாகத்தின் மீது அதிர்ப்பதியை தெரிவிக்கும் வகையில் கோசங்களையெழுப்பியதுடன் “மாணவர் ஒன்றியத்தை கலைத்த நிருபாகமே மன்னிப்புக்கோரு”, “ஜனாதிபதியைச் சந்திக்கவிடாது தடுத்தது ஏன்”, “ எமது பீடத்தைத் திறந்த ஜனாதிபதிக்கு நன்றி கூற எமக்கு உரிமை இல்லையா”, “கட்டடங்களைக் கட்டும் உபவேந்தரை விட மாணவர்களைக் கட்டியெழுப்பும் உபவேந்தர் வேண்டும்”, எங்கள் உரிமைகளைப் பறிக்கும் உபவேந்தர் எமக்கு வேண்டாம்”,”சுயநலத்துக்காக மாணவர்களைப் பழிவாங்காதே” ,“வினைத்திறனற்ற நிருவகாகமே வினைத்திறனுடன் செயற்படு” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
கடந்த மாதம் பல்கலைக் கழகத்தில் தமிழ் சிங்கள மாணவர்களிடையே ஏற்பட்ட முற்கல் நிலையையடுத்து பல்கலைக் கழகத்தின் விரிவுரைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தது.
கிழக்குப் பல்கலைக் கழகத்திறக விஜயம் செய்த உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநயக மாணவர்களுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையின் போது மாணவர்களிடையே இணக்கப்பாட்டினையடுத்து 21ஆந் திகதி திங்கட்கிழமை விரிவுரைகள் ஆரம்பிழக்கப்படும் என அறிவிக்கப்பட்ட போதும் 28ஆந் திகதி முதலாம் மற்றும் இறுதி வருட மாணவர்களுக்கு மட்டுமே விரிவுரைகள் ஆரம்பிக்கப்பட்டன.
ஆர்பாட்டகாரர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்யையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பிவைத்துள்ளனர்
ஆந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
“கிழக்கு பல்கலைக்கழக நிர்வாகத்திறன் மற்றும் உபவேந்தரின் எதேச்சிகரமான முடிவுகள் தொடர்பாக மாணவர்களாகிய நாங்கள் எங்களது விமர்சனத்தையும் அதிருப்தியையும் வெளியிடுகின்றோம்.
கிழக்கு பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் உபவேந்தர் கடந்த காலங்களில் மாணவர்களின் நலன் பாராது மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளைச் செவிமடுக்காமல் எதேச்சிகரமாக முடிவு எடுக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு கொண்டிருக்கிறது. கடந்த 19ந் திகதி அதிமேதகு ஐனாதிபதி அவர்கள் வருகை தந்து எமது வர்த்தக முகாமைத்துவ மற்றும் கலைகலாச்சார பீட நூலகம் மற்றம் விளையாட்டரங்கிற்கான புதிய கட்டிடத்தினை திறந்து வைத்த போது அந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்கு வர்த்தக முகாமைத்துவம் மற்றும் கலைகலாச்சார பீட மாணவர்களையோ ஏனைய மாணவ பிரதிநிதிகளையோ அனுமதிக்கவில்லை.
எமது மாணவர்கள் உபவேந்தரிடம் ஒரு கேள்வியை கேட்கின்றோம். வர்த்தக முகாமைத்துவ மற்றும் கலைகலாச்சார பீடம் யாருக்கு? நூலகம் மற்றும் விளையாட்டரங்கு யாருக்கு? எமது ஜனாதிபதியை சந்தித்து நாங்கள் நன்றி தெரிவிக்கவோ அதிமேதகு ஐனாதிபதியை வரவேற்பதற்கோ எமது மாணவர்களுக்கு உரிமையில்லையா?
மாணவர்களும் மாணவ பிரதிநிதிகளும் ஜனாதிபதியை வரவேற்க காத்திருந்த வேளையில் இறுதி நிமிடம் வரை மாணவர்களுக்குரிய அழைப்புகளோ நிர்வாகம் செய்ய இருக்கின்ற வேலைக்குரிய விளக்கங்களோ மாணவ பிரதிநிதிகளுக்கு வழங்கப்படவில்லை. மாணவர்கள் எதனை எதிர்பார்கின்றார்கள் என்ற உண்மையை கேட்டு அறியாமல், இவர்கள் குழப்பவாதிகள், ஜனாதிபதி வரும் வேளையில் நிருவாகத்திற்கு பிரச்சினையை வழங்குவார்கள் என்ற மிக முட்டாள்தனமான எடுகோளின் அடிப்படையிலே எந்தவித கலந்துரையாடல்களும் இன்றி இவ்வாறான பொருத்தமற்ற முடிவுகளை எடுத்துள்ளார் உபவேந்தர்.
18.4.2014 அன்று பல்கலைக்கழக ஊழியரை அனுப்பி மாணவர் ஒன்றியத்தினை இரத்து செய்துள்ளதாக ஜனாதிபதி வருகைக்கு முன்னையதினம் கடிதத்தினை அனுப்பியுள்ளனர். இதனூடாக மாணவர்களின் உரிமையை உபவேந்தர் தனது சுய இலாபத்திற்காக பயன்படுத்தியுள்ளார் என்பது தெட்டதெளிவாக தெரிகின்றது.
கடந்த வருடம் அதிமேதகு ஐனாதிபதி அவர்கள் முதல் முறையாக எமது பல்கலைகழகத்திற்கு வருகை தந்த போது மாணவ ஒன்றியமும் மாணவர்களும் நிருவாகத்துடன் இணைந்து பரீட்சைகள் நடைபெற்ற காலப்பகுதியிலும் வரவேற்பிற்காக உழைத்த உழைப்பு பல்கலைக்கழக சமூகம் நன்கு அறிந்ததே அப்படி இருப்பின் மாணவர்களா குழப்பவாதிகள்??
21.3.2014 அன்று இடம்பெற்ற அசம்பாவிதங்களை அடுத்து மாணவர்களுக்கு வகுப்புத்தடைகள் விதிக்கப்பட்ட காலப்பகுதியில் அவற்றை நிவர்த்தி செய்வதற்காக 4.4.2014 அன்று மாணவர் பிரதிநிகளுக்கு உயர் கல்வி அமைச்சருடனான கலந்துரையாடலுக்கு சிறப்பு அனுமதி அளிக்கப்படுகின்றது. அதைத்தொடர்ந்து 5.4.2014 அன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவினை நடத்த எமது மாணவர்களின் இன்னிய அணி(டீயனெ) மாணவ ஒன்றியத்தின் அனுமதியுடன் தேவைப்படுகின்றது.
ஆனால் அதிமேதகு ஐனாதிபதி அவர்களின் வருகைக்கு மாணவர்களுக்கோ மாணவர் பிரதிநிகளுக்கோ சிறப்பு அனுமதி வழங்கப்படமால் இருக்கும் பட்சத்தில் வகுப்புத்தடையிலுள்ள கலைகலாச்சார பீட மாணவர்களின் இன்னிய அணி மாத்திரம் தேவைப்படுகின்றது இது எந்த வகையில் நியாயம்? இதுவா உங்களின் நிருவாகத் திறன்? இதுவா உங்களது ஜனநாயக மரபு?
கடந்த 4ந் திகதி உயர்கல்வி அமைச்சர் வருகை தந்திருந்த போது உபவேந்தர் அவர்கள் 21ந் திகதி அனைத்து வருட மாணவர்களுக்கும் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்படும் என உறுதிமொழி அளித்திருந்தார். இதனை உயர் கல்வி அமைச்சரும் உறுதிப்படுத்திருந்தார். அவர்களின் உறுதிமொழி எங்கே? 28ந் திகதி முதலாம் மற்றும் இறுதி வருட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என அறிவித்திருந்தனர். அப்போது 2ம், 3ம் வருட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் எப்போது தொடங்கும் என்பதை ஏன் அறியத்தரவில்லை?
28ந் திகதி ஆரம்பமான இறுதியாண்டு (3ம்வருட) விஞ்ஞான பீட BSC மாணவர்களை விரிவுரைகளுக்கு செல்ல நுழைவாயில் காவலர்கள் அனுமதிக்கவில்லை. அப்படியென்றால் யாருக்காக 28ந் திகதி விரிவுரையை தொடங்கினீர்கள் ???
இதுதானா உங்களின் நிர்வாகத்திறமை? தொடர்பாடல் திறமை?
பல்கலைக்கழக ஊழியர்கள் இரவு பகல் பாராமல் மேலதிக ஊதியம் எதிர்பாராமல் மிகவும் சிரமப்பட்டு குறுகிய காலப்பகுதியில் மிகச்சிறப்பாக வேலை செய்துள்ளீர்கள். இருந்தாலும் கட்டிடங்களை கட்டுவதற்கு காட்டும் அக்கறையில் ஒரு சிறு அளவையேனும் பல்கலைக்கழக நிருவாகம் மற்றும் மாணவ கட்டமைப்பை விருத்தி செய்வதற்கோ வினைத்திறனாக ஆக்குவதற்கோ ஏன் செலவிடமுடியவில்லை???
எமது ஜனாதிபதி எங்களின் எதிர்காலத்தில் காட்டும் அக்கறையை கூட உபவேந்தர் உங்களால் காட்ட முடியவில்லை. எமது ஜனாதிபதி சர்வதேச தரத்திற்கு எமது கல்வியை உயர்த்துவதற்கு முயற்சி எடுப்பதாக உறுதிமொழி தந்திருக்கிறார். அதனை பயன்படுத்தப்பட முடியுமா? என்பது எமது மாணவர்களின் கேள்விக்குறி ஏனெனில் உபவேந்தர் பதவிக்கு வந்த பிறகும் 3 வருட கற்கை நெறி 4 வருட காலமாகவும் 4 வருட கற்கை நெறி 5 வருட காலமாகவும் ஆக்கப்பட்டு காலம் வீணடிக்கப்படுகிறது. இவை அனைத்திற்கும் காரணம் என்ன??? மேலதிக 1 வருடத்திற்கு பொறுப்பு கூறுவது யார்??? இவ்வாறு இருக்கும் போது எவ்வாறு சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதற்கு முயற்ச்சி எடுப்பது????
இந்த பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒன்றியத்தை இரத்து செய்ய அதிகாரம் உள்ள, 21.3.2014 இடம் பெற்ற பிரச்சினைக்கு தீர்வு காண மாணவர்களை பல்கலைக்கழகத்தின் உள்ளே அனுமதிக்கும் அதிகாரம் உள்ள, வாக்குறுதிகளை வழங்க இயலுமான உபவேந்தருக்கு ஏன் மாணவர்களின் கல்வி நடவடிக்கை மற்றும் அனைத்து பல்கலைக்கழக விளையாட்டில் பங்குபற்றுவதற்கு பயிற்சி மேற்கொள்வதற்கு கருசனை காட்ட முடியவில்லை???? மாணவர்களாகிய நாங்கள் கேட்கும் ஒரு கேள்வி..
மாணவருக்காக உபவேந்தரா அல்லது உபவேந்தரின் நலனுக்காகவும் பதவிக்காகவும் மாணவர்களை பகடை காயாக பயன்படுத்துகிறாரா????
சிரே~;ட மாணவர் ஆலோசகர் கூட இதில் கவனம் கொள்ளாதது ஏன் என்பது மாணவர்கள் மத்தியில் உபவேந்தரின் கைப்பொம்மையாக நிருவாகம் உள்ளதா என்று சந்தேகிக்க வைக்கின்றது.
நியாயமான மாணவர்களின் கோரிக்கைகளை புறக்கணித்தும் உபவேந்தர் கோரிக்கை விடுக்கும் மாணவர்களை உபவேந்தருக்கு விசுவாசமான ஊழியர்களின் ஊடாக தொலைபேசியில் பயத்தை ஏற்படுத்தியும் அவர்களின் நலன்களை மாத்திரம் கருத்தில் கொண்டும் செயற்படுகின்றனர்.
மாணவர்களுடன் நிர்வாகத்தின் பாதகமான தொடர்பாடல் ஊடகமாக ஒரு சில ஊழியர்கள் செயற்படுகின்றனர். மாணவ பிரதிநிதிகளை தங்களின் காலப்பகுதியில் அவர்களுக்கேற்ப பயன்படுத்திவிட்டு காலம் முடிவடைய அவர்கள் அனைத்து பிரச்சினைகளிலிருமிருந்து தப்பி ஓடி விடுகின்றனர்.
புதிதாக ஒரு மாணவ ஒன்றியம் அமைக்கப்படாத நிலையில் மாணவ ஒன்றியத்தை தமது சுய இலாபத்திற்கு ஏற்ப ரத்து செய்தமைக்கும், எமது ஜனாதிபதியை நாங்கள் சந்திக்க முடியாமல் செய்தமைக்கும், ஏனைய பல பொறுப்பு கூறவேண்டிய செயற்பாடுகளுக்கும் உரிய பதில் எமது மாணவர்கள் அனைவருக்கும் கூறியே ஆக வேண்டும். அத்தோடு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை காப்பாற்ற மறுத்ததிற்க்கும் மாணவர்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும். மேலும் உடனடியாக 2ம், 3ம் வருட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் இதனை செய்ய தவறும் பட்சம் மாணவர்களாகிய நாங்கள் ஓயமாட்டோம் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம். என அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
























