இயேசுவின் உயிர்ப்பு பெருவிழாவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட வினோத விளையாட்டு விழா

(உ.உதயகாந்த்)

இறைமகன் இயேசுவின் உயிர்ப்பு பெருவிழாவினை சிறப்பிக்கும் முகமாக ஈஸ்டர் தினத்தன்று மட்டக்களப்பு கல்லடி - டச்பார் தூய இஞ்ஞாசியார் ஆலய பங்கு திருச்சபையின் பங்கு மக்களும் பங்குத்தந்தை ஜீவராஜ் அடிகளாரும் இணைந்து மாபெரும் வினோத விளையாட்டு நிகழ்வொன்று மிகவும் சிறப்பான முறையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு ஆலய வளாகத்தில் நடைபெற்றன.

இந்நிகழ்வுக்கு அதிதிகளாக அருட்தந்தை லோரன்ஸ் லோகநாதன் அடிகளார்,  திரேசா கன்னியர் மட அருட்சகோதரிகள், இயேசு ஆச்சிரம அருட்சகோதரி, பிரதேச செயலக காணி உத்தியோகத்தர் இளஞ்செழியன், கிராம உத்தியோகத்தர் பாக்கியநேசன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது ஆண்களுக்கான மரதன் ஓட்டம், தோணி ஓட்டம், நீச்சல் ஓட்டம் , கிடுகிழைத்தல், முட்டியுடைத்தல், யானைக்கு கண் வைத்தல், கயிறிழுத்தல், வினோத உடைப் போட்டி உட்பட இளைஞர் யுவதிகளுக்கான இன்னும் பல்வேறு போட்டி நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டதுடன் வெற்றிபெற்ற வீர வீராங்கனைகளுக்கு அதிதிகளால் பரிசுகளும் வழங்கிவைக்கப்பட்டன.