சித்தாண்டி-ஈரளக்குள அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் நடைபெற்ற மெய்வல்லுனர் திறனாய்வு நிகழ்வு

(நித்தி) சித்தாண்டி  ஈரளக்கும் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த மெய்வல்லுனர் திறனாய்வு விளையாட்டு போட்டி நிகழ்வு பாடசாலையின் அதிபர் திரு.எஸ்.கணேசரெத்தினம் தலைமையில் இன்று (7.4.2014) மைதானத்தில் நடைபெற்றது. 

இந்நிழ்விற்கு பிரதம விருந்தினராக ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் திரு உ.உதயசிறிதர் கௌரவ விருந்தினர்களாக ஏறாவூர்பற்று-2 கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.பொ.சிவகுரு விஷேட விருந்தினராக ஈரளக்குள கிராமசேவை உத்தியோகத்தர் எஸ்.வீரசிங்கம் மற்றும் நான்கு பாடசாலைகளின் மாணவர்களின் பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டர். 

இந்நிகழ்வில் அதிதிகள் வரவேற்கப்பட்டதுடன் விளையாட்டு பிரகடனத்தை பிரதம விருந்தினராக கலந்துகொண்ட ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் திரு உ.உதயசிறிதர் ஆரம்பித்துவைத்தார். அதனைத்தொடர்ந்து கல்குடா கல்வி வலய உடற்கல்வி உதவிக்கல்வி பணிப்பாளர் திரு.கே.சுபாஸ்சந்திரன் அவர்களால் ஒலிம்பிக் தீமேற்றல் இடம்பெற்றது. 

நடைபெற்ற விளையாட்டுபோட்டியினை ஈரளக்குள அ.த.க பாடசாலை உட்பட பெரியவட்டவான் கண்ணகி வித்தியாலயம், பெருமாவெளி ஸ்ரீவாணி வித்தியாலயம், இலுக்குப்பொத்தானை மலைமகள் வித்தியாலயம் என நான்கு பாடசாலைகளின் மாணவ மாணவிகள் மிட்டாய் ஓட்டம், சொல்லுருவாக்கல் பெற்றார் விளையாட்டுக்கள் பழைய மாணவர் விளையாட்டுக்கள் என பல விளையாட்டுக்கள் நடைபெற்றதுடன் உடற்பயிற்சி கண்காட்சி நிகழ்சி மிகவும் சிறப்பான முறையிலே நடைபெற்றத்தும் குறிப்பிடத்தக்கது.

இதன்போது கலந்துகொண்ட அதிதிகளினால் விளையாட்டுக்களில் பங்குபற்றி வெற்றி பெற்றவர்களுக்குரிய பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன.