உடல் மற்றும் உள விருத்தியைப் பேணுவதற்காகவும், தோல்விகளை சவாலாக ஏற்கும் பக்குவம் பெறும் நோக்கோடும் ஆண் பெண் இருபாலாருக்குமான விளையாட்டுப் போட்டிகள் இன்று இடம்பெற்றன.
மட்டக்களப்பு மோர்சாப்பிட்டி வை. எம். ஏ. சி. விளையாட்டுக் கழகத்தின் 86 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தும் சித்திரைப் புதுவருட விளையாட்டுப் போட்டிகள் பயனியர் வீதியிலுள்ள மைதானத்தில் ஆரம்பமாகின.
விளையாட்டக் கழகத்தின் தலைவர் ஈ. வைரமுத்துவின் தலைமையில் போட்டிகள் இடம்பெற்றன.
மாலைநேர விளையாட்டுக்களில் சமநிலை ஓட்டம், முட்டி உடைத்தல், தலையணைச்சமர், தேங்காய் திருவுதல், சங்கீதக் கதிரை, கயிறு இழுத்தல், பொது அறிவுப் போட்டிஇ அவதானப் போட்டி மற்றும் விநோத உடைப்போட்டி உள்ளிட்ட பல்வேறு கலாசார விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றன.
கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன், மட்டக்களப்பு வர்த்தக சங்கத் தலைவர் எஸ். அமிர்தலிங்கம், பிரதம அதிதிகளாகக் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கான பரிசில்களை வழங்கி வைத்தனர்.












