மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா கல்வி பணிப்பாளரின் அறிவுறுத்தல்களை சட்ட ஆட்சிக்கு முரணாக நிருவாகத்திற்கு பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் மீறியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
பாடசாலை அதிபர் பதவியை நிரப்புதல் தொடர்பாக கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் வலயத்திறுள்ள அதிபர்களுக்கு அனுப்பிவைத்துள்ள சுற்றுநிருபத்தற்கு முரணாக கனிஷ்ட தரத்திலுள்ள நிருவாகத்திற்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் நேர்முகப் பரீட்சையினை நடார்த்தியதைக் கண்டித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளை செயலாளர் பொ.உதயரூபன் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
“மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா கல்வி வலயத்துக்குட்பட்ட விநாயகர் கிராமம் அலைமகள் வித்தியாலய அதிபர் பதவியை நிரப்பும் பொருட்டு கிழக்கு மாகாண கல்வி அமைச்சரின் கடிதத்திற்கமைய வலயத்தின் சகல அதிபர்களுக்கும் 2014.01.27 அன்று திகதியிடப்பட்டு அனுப்பப்பட்டுள்ள சுற்றுநிருபத்திற்கு முரணாக கல்குடா வலயத்திலுள்ள கனிஷ்ட தரத்திலுள்ள நிருவாகத்திற்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் நேர்முகப் பரீட்சையினை நடார்த்தி வெளிப்படைத் தன்மையற்றதும், நம்பகத்தன்மையற்றதுமான நியமிப்பின் மூலம் வெற்றிடத்தை நிரப்பியுள்ளமை சட்ட ஆட்சிக்கு முரணானது.
பாடசாலை வகை III ஐச் சேர்ந்ததாகவும் நேர்முகப் பரீட்சையானது வலய மட்டத்தில் நடைபெற்றதோடு குறிக்கப்பட்ட அதிபர் வெற்றிடத்திற்கு தகுதியானதும் சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உள்வாங்களப்பட்டுள்ள அதிபர்கள் புறக்கணிக்கப்பட்டு வலயத்தின் கல்வி வீழ்ச்சிக்கு பொறுப்புக் கூற வேண்டிய தூரநோக்கமற்ற அரசியல்வாதியொருவரின் கைக்கூலியாக செயற்படும் ஒருவரை அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
இவ்அதிபர் நியமிப்பு தொடர்பாக 2013.01.03 அன்று வெளியிடப்பட்டுள்ள கல்வி அமைச்சின் சுற்றுநிருபம் மீறப்பட்டிருப்பதோடு அதிபர் வெற்றிடம் நிரப்புதல் தொடர்பான 1998/23 இலக்க சுற்றுநிருபம் கடுமையாக மீறப்பட்டுள்ளது.
கல்குடா கல்வி வலயத்தில் சட்டத்திற்க முரணான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதோடு வினைத்திறனற்ற செயற்பாடுகள் அரசியல் நிரல்களை முன்னெடுப்பதற்காக 1225/32 இலக்கமிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானிக்கு முரணாக நியமிப்புச் செய்யப்பட்டுள்ள நிருவாகத்திற்குப் பொறுப்பான பிரதிக்கல்விப் பணிப்பாளரினால் மேற்கொள்ளப்படுவதாகவே இலங்கை ஆசிரியர் சங்கம் கருதுகிறது.
இந்த நியமிப்பு தொடர்பாக மாகாண கல்விப் பணிப்பாளரின் நேரடிக் கவனத்திற்கு கொண்டுவந்திருப்பதோடு மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு மேல்முறையீடு செய்த அதிபர்கள் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உள ரீதியல் பாதிக்கப்பட்டுள்ளார்கள் இவ்விடயம் மாகாண அளுநரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
கல்குடா கல்வி வலயத்தில் வினைத்திறனற்ற செயற்பாடுகள், சுற்றுநிருபங்கள் தொடர்சியாக மீறப்படுதல் தொடர்பாக கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. கல்குடா கல்வி வலயத்தில் மனித உரிமை மீறப்படுவது தொடர்பாக விரைவில் சட்ட நடவடிக்கையெடுக்கப்படும”; என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.