புதிதாக நிர்மானிக்கப்பட்ட திவிநெகும சமுதாய அடிப்படை வங்கி மீள்குடியேற்ப் பிரதியமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் அவர்களால் நேற்றயதினம் கொக்கட்டிச்சோலையில் திறந்துவைக்கப்பட்டது.
மேற்படி நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதியமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் அவர்கள் கலந்துகொண்டார்.
மேலும் இதன்போது, திவிநெகும திணைக்கள பணிப்பாளர் S.K.லியனகே, பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் பொன்.ரவீந்திரன், மாவட்ட திவிநெகும திணைக்களா பிரதிப் பணிப்பாளர் P.குணரெட்ணம், பிரதேச செயலாளர் திருமதி.வி.சிவப்பிரியா, மாவட்ட இணைப்பாளர் J.F.மனோகிதராஜ், திட்ட முகாமையாளர் கே.பரமலிங்கம் போன்றோரும் அதிதிகளாக கலந்துகொண்டனர்.
இதுவரை காலமும் பட்டிப்பளை பிரதேச செயலக வளாகத்தினுள் இயங்கிவந்த மேற்படி வங்கி நேற்றய தினத்திலிருந்து கொக்கட்டிச்சோலை பிரதான வீதியில் உள்ள திவிநெகும திணைக்களத்திற்கு சொந்தமான இடத்தில் இயங்கவுள்ளது.












