மட்/கால் நடைவளர்போர் கூட்டுறவுச்சங்கத்தின் விழிப்புணர்வு திட்டமும் கலாசார நிகழ்வும்

(ச.சுரேந்திக்கா)
மட்/கால் நடைவளர்ப்போர் கூட்டுறவுச்சங்கத்தின் ஏற்பாட்டில்  சுவீடன் கூட்டுறவு நிறுவனத்தின் நிதிஅணுசரணையுடன் விழிப்புணர்வு திட்டமும் கலாசார நிகழ்வும் நேற்றய தினம் புதூர் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் மட்/கால் நடைவளர்பேர் கூட்டுறவுச் சங்கத்தின் பொதுமுகாமையாளர் ம.நவறஞ்சன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இன்நிகழ்வினை மட்/கால் நடைவளர்பேர் கூட்டுறவுச் சங்கத்தின் பொதுமுகாமையாளர் ம.நவறஞ்சன் மற்றும் பொதுசுகாதாரபரிசோதகர்களான V.ரமேஸ்குமார்,    
T.ம​னோகரன் போன்றோர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

இன் நிகழ்வினைசிறப்பிக்கும் முகமாக கூட்டுறவு அபிவிருத்தி உதவிஆணையாளர், கூட்டுறவுஅபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சுவீடன் கூட்டுறவு நிறுவனஅதிகாரிகள், புதூர்விக்கினேஸ்வராவித்தியாலயத்தின் அதிபர், தளவாய் வளர்பிறைவீடமைப்பு கூட்டுறவுச்சங்கத்தின் தலைவர், புதூர் ஸ்ரீ சித்திவிநாயர்ஆலயத்தின் பிரதம குரு, பொலிஸ் உத்தியோகத்தர்கள் மட்/கால் நடைவளர்போர் கூட்டுறவுச்சங்த்தின் அங்கத்தவர்கள் பணிப்பாளாசபையினர், பொதுமக்கள் என பலரும் கலந்துசிறப்பித்தனர்.

இதன்போது  குடும்ப ஒற்றுமை, குடும்ப புரிந்துணர்வு மற்றும் எச்.ஐ.வி நோய் பருவும் முறையும் அதனை கட்டுப்படுத்துதலும் போன்ற விடயங்கள் பற்றி செயலமர்வும், கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து அன்று மலை இப் பிரதேசத்திலுள்ள புதூர்,சேற்றுக்குடா, வீச்சுக்கல்முனை, திமிலைதீவு, வலையிறவு ஆகிய ஐந்து கிராமங்களுக்கும் டெங்கு கட்டுப்பாட்டு அதிகாரிகளினால் டெங்குநோய் இனம் காணப்பட் பிரதேசங்களுக்கு புகையூட்டல் நிகழ்வுகளும் ஆரம்பிக்கப்பட்டது. இவ் வேத்திட்டத்தில் நேற்றயதினம் சேற்றுக்குடா கிராமத்தில் புகையூட்டும் வேலைத்திட்டம் முடிவடைந்துள்ளது ஏனைய கிராமங்களுக்கு இவ் வேலைத்திட்டம் எதிர்வரும் திங்கள் கிழமைக்குள் முடிவடைந்துவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அத்தடன் மட்/கால் நடைவளர்போர் கூட்டுறவுச்சங்த்தின் டெங்கு கட்டுப்பாட்டுக்காக இரண்டாவது தடவையாக முன்னெடுக்கப்பட்ட பாரியவேலைத்திட்டமும் இதுவேயாகும் என்பது குறிப்பிடத்தக்கது.