"வாழ்க்கைப் பள்ளி" இளைஞர்களுக்கான பயிற்சிப் பட்டறை

பட்டிப்பளை பிராந்திய வேள்ட் விசன் அபிவிருத்தி வேலைத் திட்டச் செயற்பாட்டின் கீழ் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மன்னார் மாவட்ட இளைஞர்களுக்கான வாழ்க்கைப் பள்ளிஎனும் பயிற்சிப் பட்டறை ஒன்று கடந்த நான்கு நாட்களாக மட்டக்ளப்பு முனைக்காடு வேள்ட் விசன் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.

பட்டிப்பளை பிராந்திய வேள்ட் விசன் அபிவிருத்தி வேலைத்  திட்ட இணைப்பாளர் என். சபேசன் அவர்களின் தலைமையில் நடந்த வியாழக்கிழமை (03) அன்று ஆரம்பிக்கப்பட்ட இப்பயிற்சிப்பட்டறை நேற்று ஞாயிற்றுக் கிழமை (06) யுடன் நிறைவடைந்தது.

இச்செயலமர்வில் மன்னார் மாவட்டத்தின் சார்பாக வேள்டவிசன் அமைப்பின் முகாமையாளர் எஸ். செல்வபதி நிதியுரிமையாளர்,  கே.அன்டனி  விசன் அமைப்பின்  கிழக்கு மாகாணத்திற்குப் கல்வி அபிவிருத்திற்குப் பொறுப்பான பிரதிநிதி மட்சலின்;ட், திட்ட இணைப்பாளர் லிங்கராஜா, இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின்சார்பாக மாவட்ட தலைவர் , செயலாளர்,  தொண்டர்களும் இளைஞர் யுவதிகள் என பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மன்னார் வேள்ட் விசன் அமைப்பின் செயற்திட்டத்தில் கல்வி நடவடிக்கையில் ஓர் அங்கமாக வாழ்க்கைப் பள்ளிஎனும் வேலைத்திட்டத்தை 8 தொடக்கம் 13 வயது சிறுவர்களுக்கு நடாத்தி வருகின்ற போதில் தற்போது இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பங்களிப்புடன் அவற்றின் தொண்டர்களுக்கான 4 நாள் கொண்ட பயிற்சி பட்டறையாக இது அமைந்திருந்தது.

பட்டிப்பளை வேள்ட் விசன் அமைப்பின் திட்ட இணைப்பாளர் என்.சபேசன் அவர்களின் இச்செயற்பாடுகள் தொடர்பில் தெரிவிக்கையில்

இந்நிகழ்வானது வாழ்க்கைப் பள்ளி எனும் கருப்பொருளில் சிறுவர்கள் அவர்களது அனுபவத்தில் ஏற்படும் விரக்திகள் மற்றும் பாதிப்புத் தன்மையில் இருந்து விடுபட்டு அவர்கள் தங்கள் கல்வி மற்றும் பொது ஈடுபாடுகளில் சிறப்பாக பங்கு கொள்வதற்கான ஒருவிசேடவேலைத் திட்டமாக அமைகின்றது.

சிறுவர்கள் எதிர்காலத்தில் எதிர் நோக்கும் சவால்கள் அவற்றிக்கு எவ்வாறு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் இலட்சியப் பாதையில் செல்வதற்குரிய வழிகள் என்ன வாழ்வின் சிறப்புடையவர்களாக நல்ல கல்விமான்களாக திகள வேண்டும் என்பன பற்றிய பயிற்சிகள் இதன்போது அவர்களுக்கு வழங்கப்பட்டன.

சூழல், சுகாதாரம், கல்வி, மற்றும் நல்ல பழக்க வழக்கங்களை பின்பற்றுதல் குழச்செயற்பாடுகள், போன்ற பல விடயங்கள் தொடர்பாகவும் பயிற்சியளிக்கப் பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.