கொக்கட்டிச்சோலை சமூர்த்தி வங்கியில் சித்திரைப் புத்தாண்டு சேமிப்பு வார நிகழ்வு


(ஆர்.பி.தீபன்) “கிராமத்தின் சேமிப்புக்கள் மக்களின் எழுச்சிக்கு“ என்கின்ற தலைப்பில் சித்திரைப் புத்தாண்டு சேமிப்பு வாரம் நிகழ்வு கைவிஷேட சுப முகூர்த்த வேளையில் இன்று(14)  காலை 11.05 மணிக்கு கொக்கட்டிச்சோலை சமூர்த்தி வங்கி முகாமையாளர் பா.துரைராஜசிங்கம் அவர்களின்  தலைமையில் இடம்பெற்றது.
சித்திரைப் புத்தாண்டு தினமாகிய இன்று வாழ்வின் எழுச்சி சமுதாய அபிவிருத்தி வங்கி(சமூர்த்தி வங்கி) திறக்கப்பட்டு வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் கைவிசேடம் வழங்கப்பட்டதுடன் இனிப்பு பண்டங்களும் பரிமாறப்பட்டு இனிய சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களும் பகிர்ந்துகொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் 150ற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் கலந்துகொண்டதுடன் தங்களின் பங்கு, சிறுவர், சிசுரக்க மற்றும் குழு கணக்குகளில் சேமிப்பு செய்து பெறுமதிமிக்க அன்பளிப்பு பரிசில்களையும் பெற்றுக்கொண்டனர்.