(ராஜா)
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியநீலாவணை சவக்காலை அருகில் நேற்று சித்திரை வருடப் பிறப்பன திங்கட் கிழமை (14) மாலை வேளையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
வீரமுனையை வசிப்பிடமாகவும் பெரியநீலாவணையை பிறப்பிடமாகவும் கொண்ட எஸ்.ராமசந்திரன் (50) என்பவரே மேற்படி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பெரியநீலாவணை சவக்காலை வீதியில் கடலிலிருந்து 100 மீற்றருக்கு இடைப்பட்ட பிரதேசத்தில் வளவொன்றின் முன்னால் உள்ள முட்கம்பி வேலியருகிலேயே இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் 3 மணியளவில் குடும்பத்தினர் கொடுத்த தகவலையடுத்தே மேற்படி சடலம் பொலிஸாரின் உதவியுடன் அடையாளம் காணப்பட்டது.
இரண்டு ஆண் மற்றும் நான்கு பெண் பிள்ளைகளின் தந்தையான இவர் மருதமுனையைச் சேர்ந்த ஒருவரின் மாட்டுப் பண்ணை வளர்ப்பாளராக பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சம்பவ இடத்திற்கு விரைந்த கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி அன்ரனி ஜுட்ஸன் சடலத்தை பார்வையிட்டு பிரேத பரிசோதனைக்காக கல்முனை ஆதார வைத்திசாலைக்கு அனுப்புமாறு பணித்துள்ளார்.
கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு.எம். கப்பார் தலைமையிலான குழுவினர் விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்..