கிழக்கு மாகாண பொது நூலகங்களின் நூலகர்களுக்கான பயிற்சிப்பட்டறை


(சித்தாண்டி நித்தி) கிழக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி திணைக்களத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண பொது நூலகங்களின் நூலகர்கள், நூலக உதவியர்களுக்கான நூல் பகுப்பாக்கம், சிறுவர் நூலக பிரிவுகள் அமைத்தல் போன்ற கருப்பொருளில் 28/04/2014-29/04/2014  ஆகிய தினங்களில் இரண்டு நாட்கள் செயலமர்வு திருகோணமலை முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி திணைகளத்தின் பயிற்சி மண்டபத்தில் முகாமைத்துவ அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர்  A.S M  பாயிஸ் தலைமையில் இடம் பெற்றது இச்செயலமர்வின் வளவாளர்களாக யாழ் பல்கலைகழக நூலகர் திருமதி S.அருளானந்தம் உட்பட யாழ் பல்கலைகழக உதவி நூலகர்களான திருமதி  S.விசாகரூபன், திரு.S.நவநீதகிருஷ்ணன்,  ச.மகிரன், S.அகிலன் கிழக்கு பல்கலைகழக உதவி நூலகர்களான T.ரமணன் , M.ரவிக்குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர் இறுதி நாள் நிகழ்வில்செயலமர்வில் கலந்து கொண்ட அனைவர்க்கும் சான்றிதல்கள் வழங்கபட்டது .இவ்சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கிழக்கு மாகாண முதல் அமைச்சின் செயலாளர் U.L.M.அசிஸ் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.