(சித்தாண்டி நித்தி) ஏறாவூர்பற்று-ஈரளக்கு கிராமசேவகர் பிரிவு 18 கிராமங்களை உள்ளடக்கிய பெரிய நிலப்பரப்பை கொண்டு காணப்படுவதுடன் இங்குள்ள மக்கள் வாழ்வாதார அடிபப்டை வசதி குறைந்தவர்களாகவும் அத்துடன் கடந்த காலங்களில் ஏற்பட்ட யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் சுமார் 314 குடும்பங்கள் வசித்துவரும் இப்பிரிவில், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியின் கீழ் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு 117புதியவீடு மற்றும் 57திருத்தல் வீடுகள் என மொத்தமாக 174 வீடுகளை வழங்கியதுடன் யூஈ கப்பிற்றாட் நிறுவனம் அதனை முன்னின்று செயற்படுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது. புதிய வீடுகள் 80வீதம் திருத்தல் வீடுகள் 85வீதம் நிறைவடைந்த நிலையிலுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய வீடுகளை திறந்து வைத்து வீட்டு உரிமைளார்களிடம் கையளிக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் திரு.உ.உதயசிறிதர் தலைமையில் நடைபெற்றதுடன் இந்நிகழ்வுக்கு வருகைதந்த ஏறாவூர்பற்று பிரதேச ஒருங்கிணைப்பு தலைவரும் ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ.சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் சுபவேளையில் (25.04.2014) நடாவெட்டி திறந்துவைத்ததுடன் வீட்டு உரிமையாளரினால் நடைபெற்ற பூசையிலும் கலந்துகொண்டு பொதுமக்களிடம் ஏனைய பிரச்சினைகளையும் கேட்டு அறிந்தார். இந்நிகழ்வுக்கு பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் திரு.ஆர்.கங்காதரன் மற்றும் பொதுமக்கள் என பலர் கந்துகொண்டனர்.












