தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பிரதிநிதித்துவப் படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இன்று ஞாயிற்றுக்கிழமை (06) மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசத்தின் போரதீவுபற்று பிரதேசத்திற்குட்பட்ட இளைஞர் விவசாயத்திட்டம் எனும் எல்லைஓரக் கிராமத்தில் மக்கள் சந்திப்பு ஒன்றில் ஈடுபட்டனர்.
இதன்போது அப்பிரதேச மக்கள் தற்போது எதிர் நோக்கிவரும் பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்து கொண்டனர்.
குடிநீர், போக்குவரத்து, கல்வி, சுகாதாரம், மற்றும் காட்டு யானைகளின் தொலைகள் போன்ற பல பிரச்சனைகள் தொடர்பில் மேற்படி அரசியல் பிரமுகர்களிடம் அப்பகுதிவாழ் பொதுமக்கள் எடுத்துக் கூறினர்.
பொதுமக்கள் தெரிவித்த குறைபாடுகள் தொர்பில் சம்மந்தப்பட்ட அதிகளிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்து தாம் தீர்வு பெற்றுத்தருவதாக இதன்போது கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.
இச்சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான, கோ.கருணாகரம்(ஜனா), ஞா.கிருஷ்ணபிள்ளை (வெள்ளிமலை), இரா.துரைரெத்தினம், மா.நடராசா, இ.பிரசன்னா, ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.












