சித்திரை புத்தாண்டு காலத்தில் மதுபோதையில் பயணிகள் பஸ்வண்டிகளைச் செலுத்திய 12 சாரதிகளின் சாரதி அனுமதிப் பத்திரத்தை முழுமையாக இரத்துச் செய்வதற்கு நீதிமன்றத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கவிரு ப்பதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரையான காலப்பகுதியில் குடிபோதையில் வாகனங்களைச் செலுத்திய 1315 வாகனச் சாரதிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பயணி கள் பஸ் சாரதிகள் 12 பேர் உள்ளடங்கு கின்றனர். இவர்களின் சாரதி அனுமதிப் பத்திரத்தை முழுமையாக ஆயுள் முழுவதும் இரத்துச் செய்வதற்கு நீதிமன்றத்தின் ஊடாக கோரிக்கை விடுக்கவிருப்பதாகவும், ஏனைய சாரதிகளின் சாரதி அனுமதிப் பத்திரத்தை குறைந்தது ஒரு வருடத்துக்காவது இடைநிறுத்தி வைப்பதற்கு நீதிமன்றத்தின் உதவியை நாடவிருப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன கூறினார்.
பண்டிகைக் காலத்தில் இடம்பெற்ற 56 பாரிய வீதி விபத்துக்களில் 62 பேர் உயிரிழந்துள்ளனர். இக்காலப் பகுதியில் மொத்தமாக இடம்பெற்ற 592 வீதி விபத்துக்களில் 126 பேர் படுகாயமடைந்திருப்பதுடன், 243 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
சொத்துக்களுக்கு சேதங்களை ஏற்படுத்திய 243 வீதி விபத்துக்களும் இடம்பெற்றுள்ளன.
அதேநேரம், 2013ஆம் ஆண்டு குடி போதையில் வாகனங்களைச் செலுத்திய 51,764 சாரதிகள் கைது செய்யப்பட்டதுடன், 2014ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் ஏப்ரல் வரையில் 14,153 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.