களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் , களுவாஞ்சிகுடி விஷ்ணு ஆலயங்களில் இடம்பெற்ற விசேட பூஜை

(ராஜா)

பிறந்திருக்கும் ஜய சித்திரை வருடப்பிறப்பினை முன்னிட்டு இன்று மட்டக்களப்பு மாவட்டத்திலும் அனைத்து இந்து ஆலயங்களிலும் விசேட பூஜை ஆராதனைகள் இடம்பெற்றதனைக் காணக்கூடியதாக உள்ளது.

அந்த வகையில் களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயம், களுவாஞ்சிகுடி விஷ்ணு ஆலயம் களுதாவளை ஸ்ரீ சிவ சக்திமுருகன் ஆலயம் போன்றவற்றில் விஷேட பூகைள் நடைபெற்றன.

ஆலயங்களில் பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்ததனையும் காணக் கூடியதாக உள்ளது.

இதேவேளை ஆலயங்களில் ஆலய பிரதம குருவினால் கை விஷேடம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றமை சிறப்பம்சமாகும்.