குறுமண்வெளி அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய மஹா கும்பாபிஷேகம்

( ரவிப்ரியா )  
மட் குருமண்வெளி அருள்மிகு ஸ்ரீபத்தரகாளி அம்பாள் தேவஸ்தான புனராவர்த்தன அஸ்டபந்தன மஹாகும்பாபிஷேக பெருஞ்சாந்தி குடமுழுக்கு
விஞ்ஞாபன ஆரம்ப கிரியைகள் நேற்று சனியன்று ஆலய தலைவர் வ.ராஜதுரை தலைமையில்  ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று ஞாயிறுன்று  கிராமப் பிரவேசம்   (புதிய மூhத்திகள் ஊர்வலம்) நடைபெறும்.

திங்களன்று பக்தர்கள் எண்ணெய்க் காப்புச்சாத்தும் முக்கிய நிகழ்வு இடம் பெறும். 9ந் திகதி புதன்கிழமை பிரதான கும்பம் வீதி உலா வந்து சுபமுகூர்த்தத்தில் ஸ்த்தூபி அபிஷேகம் மஹா கும்பாபிஷேகம், மகாகவிர்நிவேதினம், தேவர்கள் வழிபாட்டிற்காக திருக்கதவு சாத்துதல் தசமங்கல தர்சனம் இடம்பெற்று, தொடர்ந்த மகாபிஷேகம், அலங்கார பூஜை, எஜமானபிஷேகம் ஆச்சாரிய சம்பாவனைஆசியுரை, பிரசாதம் வழங்குதல் என்பன நடைபெறும்.

பிரதிஸ்டா பிரதம குரு சிவாகம கிரியா திலகம், சாதகமாமணி, ஆரியபாஷா விற்பனர் சிவாகமஞானபானு, தற்புருச தேசிகர் சிவஸ்ரீ வ.கு.யோகராசா குருக்கள் மற்றும் தேசகீர்த்தி, கோதிடகலாமணிகிரியா ஜோதி சவஸ்ரீ ஜீ.என்.திருக்கணேஸ்வரக் குருக்கள் ஆகியோர் தலைமையில் இடம் பெறும்.