(மா.சசி)
மட்டக்களபப்பு புனித மிக்கேல் கல்லூரியின் மைக்கலைற் கிராண்ட் எக்ஸ்போ 2014 கண்காட்சி நிகழ்வுகள் நாளை 29 ஆரம்பித்து நாளை 30 ஆம் திகதி நிறைவுபெறவுள்ளது.
இக் கண்காட்சியானது காலை 9.00 மணிமுதல் மாலை 5.00 வரை நடைபெறவுள்ளதுடன் முதல் நாள் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திசாநாயக்கவும், 2ஆம் நாள் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ளஸ் ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்து கொள்கின்றனர்.
கொளரவ மற்றும் சிறப்பு அதிதிகளாக, மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் எம்.உதயகுமார், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிசாம், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வெ.தவராஜா, மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன், பிரதிக் கல்விப் பணிப்பாளர் பி.கோவிந்தராஜா, அருள்திரு போல் சற்குணநாயகம் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி தேசியப்பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டு 20 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டும், பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 140 வருடங்கள் நிறைவடைகின்றமையைச் சிறப்பிக்கும் முகமாகவும் இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிபர் திருமதி எஸ்.மாசிலாமணி தெரிவித்தார்.
துரதிஸ்ர வசமாக 94ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கண்காட்சிக்குப் பின்னர் இந்த வருடமே இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்ந்து நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
அதே நேரம், ஒவ்வொரு பாடத்துறைக்கும் காட்சிக் கூடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வங்கிகள், மீன்பிடித்திணைக்கள் உள்ளிட்ட திணைக்களங்களும் காட்சிக்கூடங்களை நிறுவவுள்ளன. மொத்தமாக 80 காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பெற்றோர்கள் இணைந்து முழுமையான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக பிரதி அதிபரும் கண்காட்சி இணைப்பாளருமான இரத்தினசிங்கம் பெஸ்லியோவான் தெரிவித்தார்.
புனித மிக்கேல் கல்லூரி 2600 மாணவர்களையும், 125 ஆசிரியர்களையும் கொண்ட கிறிஸ்தவ பாதிரிமார்களின் தீவிர செயற்பாடுகளுக்குள் இருந்து முன்னேற்றத்துடன் செயற்பட்டுவரும் தேசியப்பாடசாலையாகும்.
நாளை 29ஆம்திகதி ஆரம்பமாகும் இக் கண்காட்சியை தேவைகள் ஏற்படும் பட்சத்தில் முதலாம் திகதி வரை நீடிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன












