21 வது பொன்னணிகளின் போர் (battle of the Golds) கிண்ணம் மட்டக்களப்பு சிவானந்த வெற்றி

21வதுபொன்அணிகளின் சமரை battle of the Golds மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயம்  3 விக்கட்டுக்களால் வெற்றி கொண்டுள்ளது.  செவ்வாய்க்கிழமை 27.05.2014 இப்போட்டி திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

1993ம் வருடம்  இப்போட்டி தொடர் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இது வரை நடைபெற்ற போட்டிகளில் 12 தடவைகள் திருகோர்ணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி  அணியினரும், 9 தடவைகள் மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலய அணியினரும் வெற்றி பெற்றுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை 27.05.2014 நடைபெற்ற 21வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி அணியினர் 41.3. பந்து பரிமாற்றங்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 119 ஓட்டங்களைப் பெற்றனர்.  பே.பானுசாந் 22, சி.அகில்ராஜ் 18, ரா.ராசித் 14, செ.திவாகரன் 13 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தனர். பந்து வீச்சில் சிவானந்தா வித்தியாலயத்தின் சார்பில் வை.சசிகரன்  23 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுக்களைப் பெற்றுக் கொண்டார்.

120 என்ற இலக்கோடு களம் புகுந்த சிவானந்தா வித்தியாலய அணியினர் 32.1 பந்து பரிமாற்றங்களில் 7 விக்கட் இழப்பிற்கு 122  ஓட்டங்களைப் பெற்று 3 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றனர்.

எம்.நிவாசன் ஆட்டம் இழக்காமல் 36 ஓட்டம், சி.அனோஜன் 31, ஏ.பிரிவிராஜ் 13 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தனர்.
பந்து வீச்சில் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி அணி சார்பில் செ.திவாகரன் 2, ரஸ்மின் 2, டெரன்ஸ் 1  விக்கட்டுக்ளைப் பெற்றுக் கொண்டனர்.

இப்போட்டியில் சிற்நத களத்த தடுப்பாளராக சி.அகில்ராஸ் (இ.க)  சிறந்த பந்து வீச்சாளராக எம்.நிவாசன், பந்து வீச்சாளர் வை.சசிகரன், போட்டி நாயகனான எம்.நிவாசன் ஆகியோர் தெரிவு செ்யப்பட்டு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இவர்களுக்கு முந்நாள்   வீரர் அமரர் மு.நர்மதன் நினைவாக விசேட் பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டது.

திருகோணமலை பொலிஸ் பிரிவு பொலிஸ் அத்தியட்சகர்  மாரக் அன்ரனி பிரதம அதிதியாக கலந்து கொண்டு  வெற்றிக்கிண்ணத்தை வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் திருகுாணமலை நகர சபை தலைவர் க.செல்வராசா  கௌரவ விருந்தினராகவும், திருகுாணமலை வலயக் கல்வி பணிப்பாளர் ந.விஜேந்திரன் விசேட விருந்தினராகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.