(சித்தாண்டி நித்தி) ஏறாவூர்-4 வரசித்திவிநாயகர் ஆலயத்தின் வருடாந்த உற்சவ விழா 05.05.2014 (திங்கட்கிழமை) அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 7ம் திருவிழவாகிய இன்று (11.05.2014) பால்குடபவணி காளியம்மன் ஆலயத்திலிருந்து பக்தர்களினால் எடுத்துவரப்பட்டு விநாயக பெருமானுக்கு விசேட அபிசேகம் நடைபெற்றன.
உற்சவ விழாவுக்கான பூசைகளை மகோற்சவ வேதாகம உதயன்சூரியன் சிவஸ்ரீ ஆதிசவுந்தராஜா குருக்கள் இணைந்து ஆலயத்தின் சிவாகம கிரியாஜோதி சைவகிரிய இளஞ்சுடிர் ஈசானதேசிகர் சிவஸ்ரீ த.உருத்திரமூர்த்தி குருக்கள் அவர்களினாலும் உற்சவ பூசைகள் அனைத்தும் நடைபெற்றுவருகின்றது. ஒன்பது நாள் திருவிழாவை கொண்ட ஆலயத்தின் வருடாந்த உற்சவ விழாவின் இறுதி நிகழ்வாக விநாயகப்பெருமான் எழுந்தருளி சவுக்கடி இந்துமா சமுத்திரத்திற்குசென்று 14.05.2014 திகதி காலை தீர்த்த உற்சவத்துடன் நிறைவடையருப்பதும் குறிப்பித்தக்கது.












